ஆர்டருக்கு மேல ஆர்டர்.. வெறும் ரூ.10,999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
அமேசான் (Amazon) தள்ளுபடியில் வெறும் ரூ.10,000 பட்ஜெட்டுக்கு பக்கா பிரீமியம் டிசைன், 12ஜிபி ரேம், 64 எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55) போன் கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ என்55 அம்சங்கள் (Realme Narzo N55 Specifications): இந்த நார்சோ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி 52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

அதோடு ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஃபன்ச் ஹோல் கேமரா மாடலாகும்.
இந்த போனில் 2 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆகவே, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. அதோடு 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.
இந்த ரியல்மி நார்சோ மாடலில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 33W சூப்பர்வூர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த பேட்டரியோடு சேர்த்து 189.5 கிராம் எடை கொண்டிருக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது.
அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த நார்சோ மாடலில் பிரைம் பிளாக் (Prime Black) மற்றும் பிரைம் ப்ளூ (Prime Blue) ஆகிய 2 கலர் வருகின்றன.
இந்த மாடலின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 10,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இதில் 6 ஜிபி வேரியண்ட்டுக்கு அமேசான் தளத்தில் ரூ.2000 மதிப்பில் கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ரூ.12,200 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் மூலம் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டை வெறும் ரூ.10,999 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். கிட்டத்தட்ட ரூ.10,000 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 64 எம்பி கேமரா போன்ற அம்சங்கள் வேண்டுமானால், இந்த போனை வாங்குங்கள்.


Click it and Unblock the Notifications








