Home
Mobile

எல்ஜி த்ரில் மற்றும் சாம்சங் எக்ஸிபிட் 4ஜி போன்கள் ஒப்பீடு

By Super
எல்ஜி த்ரில் மற்றும் சாம்சங் எக்ஸிபிட் 4ஜி போன்கள் ஒப்பீடு
அதிக வசதிகள், எளிமையான செயலிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் எப்போதும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.

போட்டி போட்டுக்கொண்டு அடுத்தடுத்து இரு நிறுவனங்களும் களமிறக்கி வரும் போன்களால், மொபைல் மார்க்கெட்டில் அவ்வப்போது பரபரப்பு ஏற்படுவது வாடிக்கை.

இந்த நிலையில், அடுத்த தலைமுறை 4ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் முனைப்பில் இரு நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் வழக்கமான பரபரப்பு கூடியுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எல்ஜி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள த்ரில் மற்றும் சாம்சங் விரைவில் களமிறக்கும் எக்ஸிபிட் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.

இரு போன்களும் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளன. இதில், எல்ஜி த்ரில் போனின் டிஸ்பிளே அளவில் சற்று பெரிதாக இருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களை பொறுத்தவரை, ஆடியோ, வீடியோ பிளேயர், ப்ளேபேக், ரெக்கார்டிங் வசதிகள் இரு போன்களிலும் நிரம்ப உள்ளன. எம்பி3, எம்பி4 உள்ளிட்ட அனைத்து ஆடியோ பார்மெட்டுகளிலும் இசையை கேட்டு மகிழலாம்.

ஹைடெபினிஷன் வீடியோ பார்மெட்டையும் இரண்டு போன்களும் ஆதரிக்கிறது. ஆனால், இதில் எல்ஜியின் த்ரில் போன் டிஸ்பிளே 3டி தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

இரண்டு போன்களிலும் ஹோம் தியேட்டரை இணைக்கும் வசதிகொண்ட 3.5 மிமீ ஸ்லாட் உள்ளது. எப்எம் ரேடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் பொதுவான அம்சங்களாக இருக்கின்றன.

த்ரில் போனில் 1080பி வீடியோ ரெக்கார்டிங் செய்யும் ஆற்றல்வாய்ந்த 5 மெகா பிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், சாம்சங் எக்ஸிபிட் 3 மெகாபிக்செல் கேமரா மட்டுமே கொண்டுள்ளது. இரண்டிலும் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமரா உள்ளது.

இரண்டிலும் புளூடூத் மற்றும் வை-பை கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன. ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் கனெக்ட்டிவிட்டிகளுடன் 3ஜி மற்றும் 4ஜி ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்ப வசதியை அளிக்கின்றன. ஆனால், தகவல்பரிமாற்ற வேகத்தில் த்ரில்லை எக்ஸிபிட் சிறப்பாக இருக்கிறது.

விரைவில் அறிமுகமாவுள்ள இந்த இரண்டு 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இரண்டு போன்களும் சமமான விலையிலேயே மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டில் எல்ஜியின் த்ரில் சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X