ரூ.10,000 போன் ரூ.6,000-க்கு.. Amazon-ன் Summer Sale-ல்.. செம்ம டிமாண்ட் ஆகும் Itel போன்.. 12GB ரேம் வேற!
12ஜிபி வரையிலான ரேம், 120ஹெர்ட்ஸ் 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆப்பிள் ஐபோன்களில் காணப்படுவது போன்ற டைனமிக் பார் அம்சம், 5000mAh பேட்டரி போன்ற முக்கிய முக்கிய அம்சங்களுடன் அறிமுகமான ஒரு ஐடெல் ஸ்மார்ட்போன் தற்போது வெறும் ரூ.6000க்கு வாங்க கிடைக்கிறது.
அது ஐடெல் ஏ70 (Itel A70) மாடலாகும். கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் நடக்கும் ஸ்மார்ட்போன்ஸ் சம்மர் சேல் (Smartphones Summer Sale) என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் வெறும் ரூ.6,099 க்கு வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் வலைதளத்தின்படி, ஐடெல் ஏ70 ஆனது ரூ.9,999 க்கு பதிலாக ரூ.6,099 க்கு வாங்க கிடைக்கும். இதில் ரூ.700 வங்கி சலுகையும் (Bank Offer) அடங்கும். ஒருவேளை உங்களால் பேங்க் ஆஃபரை பயன்படுத்த முடியாவிட்டால், ஐடெல் ஏ70 மாடலை ரூ.6,799 க்கு வாங்க முடியும்.
ரூ.6,000-க்கு ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ? சந்தேகமே வேண்டாம். ரூ.7000 - ரூ.10000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவர்கள் ஐடெல் ஏ70 மாடலை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். உண்மையிலேயே இது "விலையை மீறிய" பல அம்சங்களை தன்வசம் கொண்டுள்ளது.

அப்படி என்னென்ன அம்சங்களை ஐடெல் ஏ70 கொண்டுள்ளது? இது 1612 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
முன்னரே குறிப்பிட்டபட, இந்த ஸ்மார்ட்போனில் ஐபோன்களில் காணப்படும் டைனமிக் ஐலண்ட் (Dynamic Island) அம்சத்தை போலவே செயல்படும் டைனமிக் பார் (Dynamic Bar) என்கிற அம்சமும் உள்ளது. இது டிஸ்பிளேவின் மேல்பாகத்தில்.. பேஸிக் ஆன நோட்டிஃபிகேஷன் மற்றும் அலெர்ட்களை வழங்கும் ஸ்மார்ட் அசிஸ்டென்ட் (Smart Assistant) ஆக செய்லபடும்.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது ஆக்டா-கோட் யுனிசாக் டி603 (Octa-core Unisoc T603) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மெமரி ஃபியூஷன் டெக்னாலஜியின் வழியாக ஒட்டுமொத்த ரேம்-ஐ 12ஜிபி வரை நீட்டிக்க முடியும். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, அதிகபட்சம் மை256ஜிபி கிடைக்கும். அதை எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை விரிவாக்க முடியும்.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 கோ (Android 13 Go) வெர்ஷன் அடிப்படையிலான ஐடெல்ஓஎஸ் 13 (ItelOS 13) உடன் அனுப்பப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Steup) உள்ளது. அதில் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா + இரண்டாம் நிலை ஏஐ கேமரா (AI-backed Secondary Sensor) உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 8.6மிமீ தடிமன் அளவிலான ஸ்லிம் பாடி டிஸைனை பெற்றுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 4ஜி, வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் . க்ளோனாஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Fingerprint Sensor) உடன் வருகிறது.
அமேசான் ஸ்மார்ட்போன்ஸ் சம்மர் சேலில் அணுக கிடைக்கும் மற்ற ஆபர்களை பொறுத்தவரை..டெக்னோ ஸ்பார்க் 20சி ரூ.10,499 க்கு பதிலாக ரூ.8,999 க்கும், டெக்னோ பாப் 8 ரூ.7,799 க்கு பதிலாக ரூ.6,499 க்கும், டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
இதேபோல டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கும், டெக்னோ ஃபாண்டாம் வி போல்ட் ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கும், டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ரூ.22,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








