128ஜிபி மாடல் அறிமுகம்; சத்தமின்றி சாம்சங் பார்த்த வேலை; இந்தியர்கள் குஷி!

சாம்சங் நிறுவனம், அதன் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் 128 ஜிபி சேமிப்பு மாடல்களை சத்தமின்றி இந்திய சந்தையில் (கெஜெட்ஸ் என்டிடிவி.காம் அறிக்கையின் படி) அறிவித்துள்ளது.

|

சாம்சங் நிறுவனம், அதன் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் 128 ஜிபி சேமிப்பு மாடல்களை சத்தமின்றி இந்திய சந்தையில் (கேஜெட்ஸ் என்டிடிவி.காம் அறிக்கையின் படி) அறிவித்துள்ளது.

128ஜிபி மாடல்; சத்தமின்றி சாம்சங் பார்த்த வேலை;  இந்தியர்கள் குஷி!

அறிக்கையின் படி, இந்த இரு ஸ்மார்ட்போன்களின் 128 ஜிபி மாடல்கள் ஆப்லைன் சேனல்களில் வாங்க கிடைக்கும். முன்னர் எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்கள் மட்டும் ஆன்லைனில் வாங்க கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்9-ன் 128 ஜிபி மாடல் ஆனது ரூ.61,900/-க்கும் எஸ்9 ப்ளஸ்-ன் 128 ஜிபி மாடல் ரூ.68,900/-க்கும் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள எஸ் 9 மற்றும் எஸ் 9 ப்ளஸ்-ன் ​​64 ஜிபி மாடல் ஆனது முறையே ரூ.57,900/-க்கும் மற்றும் ரூ.64,900/-க்கும் வாங்க கிடைக்கிறது. இறுதியாக சாம்சங் கேலக்ஸி எஸ் 9 மற்றும் எஸ் 9 ப்ளஸ்-ன் 256 ஜிபி மாடல் ஆனது முறையே ரூ.65,900/-க்கும் மற்றும் ரூ.72,900/-க்கும் வாங்க கிடைக்கிறது.

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ பிரதான அம்சங்கள்

சாம்சங் எஸ்9 ஒரு 5.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுருக்க, மறுகையில் உள்ள எஸ்9+ ஆனது 6.2 அங்குல டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் எக்சிநோஸ் (Exynos) 9810 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது. கேலக்ஸி எஸ்9 ஒரு 4ஜிபி ரேம் கொண்டுருக்க, கேலக்ஸி எஸ்9+ ஆனது 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 400 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு கொண்டுள்ளது.

எஸ்9 ஆனது வேரியபிள் அப்பெஷர் (அதாவது எப் / 1.5 மற்றும் எப் / 2.4 ஆகியவைகளுக்கு இடையே மாறும் திறன்) கொண்ட ஒரு 12-மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டிருக்க, கேலக்ஸி எஸ்9+ ஆனது இரண்டு 12 மெகாபிக்சல் கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனின் டூயல் கேமராக்கள் மற்றும் எஸ்9-ன் ஒற்றை கேமரா ஆகிய இரண்டிலுமே, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலை]சேஷன் (OIS), லேசர் மற்றும் டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களுமே எப் / 1.7 துளை கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
128 GB model of Samsung S9, S9+ launched in India: Report. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X