தெறிக்குது ஆர்டர்.. OFFER விலையில் விற்பனை ஆரம்பம்! சூப்பர் டெலிஃபோட்டோ ZEISS கேமரா, 16GB ரேம், 120W சார்ஜிங்!
விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் (Flagship) மற்றும் கேமரா சென்ட்ரிக் (Camera Centric) ஸ்மார்ட்போன்களாக விவோ எக்ஸ்100 சீரிஸ் (Vivo X100 Series), கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமானது. இதன்கீழ் விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ என 2 மாடல்கள் வெளியாகின.
தற்போது இவ்விரு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வந்துள்ளன. ஜனவரி 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் விற்பனைக்கு வந்துள்ள விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன? ஆஃபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

இந்திய விலை நிர்ணயம் மற்றும் விற்பனை விவரங்கள்: விவோவின் 2 புதிய எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart), அதிகாரப்பூர்வ விவோ இந்தியா இ-ஸ்டோர் (Vivo India e-store) மற்றும் பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கிறது.
விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டரோஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.63,999 க்கும், ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.69,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

விவோ எக்ஸ்100 சீரீஸ் மீது என்னென்ன ஆஃபர் கிடைக்கிறது? இவ்விரு ஸ்மார்ட்போன்களின் மீதும் 24 மாத நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) விருப்பத்தின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதன்கீழ் மாதத்திற்கு ரூ.2667 முதல் என்கிற இஎம்ஐ-யின் கீழ் மற்றும் ஸீரோ டவுன் பேமண்ட்டின் (Zero Down Payment) கீழ் விவோ எக்ஸ்100 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும்.
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் எஸ்பிஐ கார்டு (SBI Bank) வழியாக விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 10% கூடுதல் கேஷ்பேக் (Cashback) கிடைக்கும். மேலும் விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது ரூ.8,000 கூடுதல் அப்கிரேட் போனஸும் (Upgrade Bonus) கிடைக்கிறது.

எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) மற்றும் எஸ்பிஐ பேங்க் டெபிட்/சிடிட் கார்டுகள் வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு (EMI Transactions) பிளாட் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் (Instant Discount) மற்றும் ரூ 8,000 வரையிலான கூடுதல் ப்ராடெக்ட் எக்ஸ்சேன்ஜ் போனஸ் (Extra Product Exchange Bonus) கிடைக்கும்.
விவோ எக்ஸ்100 ப்ரோ அம்சங்கள்: டூயல் சிம், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4 ஓஎஸ், 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்பில்ட் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ஸெய்ஸ்-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் Sony IMX989 1-இன்ச் சென்சார் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 50 மெகாபிக்சல் ஸெய்ஸ் APO சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள இந்த விவோ ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரியை பேக் செய்கிறது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 12.5 நிமிடங்களில் இது பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரை நிரப்பும்.
விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4 ஓஎஸ், 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16ஜிபி வரையிலான LPDDR5 RAM மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இதுவும் ஸெய்ஸ்-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. இதில் OIS உடன் 50 மெகாபிக்சல் Sony IMX920 VCS பயோனிக் மெயின் கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 100எக்ஸ் ஜூமிங்கை வழங்கும் 64-மெகாபிக்சல் Zeiss சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள இந்த விவோ ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 11 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை பேட்டரியை நிரப்பும். மேலும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 14.8 நாட்கள் ஸ்டேண்ட்பை டைமை வழங்கும்.


Click it and Unblock the Notifications








