சைனீஸ் போன்களுக்கு சங்கு ஊதிய LAVA! 16GB ரேம், Curved டிஸ்பிளே, 32MP செல்பீ, 64MP EIS கேமராவுடன் புது 5G போன்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆட்சி செய்யும் சீன நிறுவனங்களுக்கு வேட்டு வைக்கும் விலை மற்றும் அம்சங்களுடன், இந்திய நிறுவனமான லாவா ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனாக லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பிளேஸ் கர்வ் 5ஜி மாடலானது, அதன் விலையை மீறிய பல அம்சங்களை பேக் செய்கிறது.

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 Chipsert) மூலம் இயக்கப்படுகிறது,
8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த லாவா ஸ்மார்ட்போனில் "இன்னும் செயல்திறனை மேம்படுத்த உதவும்" 8ஜிபி மெய்நிகர் ரேம் ஆதரவும் கிடைக்கும். இப்படியாக லாவா பிளேஸ் கர்வு 5ஜி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 16ஜிபி வரை கொண்டுசெல்ல முடியும்.

கேமராவை பொறுத்தவரை, லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Aetup) உள்ளது. அதில் இஐஎஸ் (EIS) ஆதரவுடன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (33W Fast Charging Support) உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. லாவாவின் கூற்றுப்படி , இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப் கிடைக்கும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்க லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. மேலும் 5ஜி (5G), வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களையும் கொண்டுள்ளது.
லாவாவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் வருகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 14 (Android 14) மற்றும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் (Android 15 Update) கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி விலை மற்றும் விற்பனை தேதி: இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 11 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் இந்தியா, லாவா இ-ஸ்டோர் மற்றும் லேவ் ரீடெய்ல் நெட்வொர்க்குகள் வழியாக விற்பனைக்கு வரும். லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அயர்ன் கிளாஸ் (Iron Glass) மற்றும் விரிடியன் கிளாஸ் (Viridian Glass) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








