Home
Mobile

ஜூலை 12 க்குள்.. அடுத்த 5 நாட்களில் அறிமுகமாகும் 13 புதிய ஸ்மார்ட்போன்கள்.. என்னென்ன மாடல்? என்ன விலை?

உங்கள் ஊரில், இந்த வாரம் மழை அடித்து வெளுக்கிறதோ இல்லையோ.. ஆனால் இந்திய மற்றும் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தைகளில்.. "புதிய அறிமுகங்களின் கனமழை" பொழிய போகிறது. இன்று (ஜூலை 8 ஆம் தேதி) தொடங்கி ஜூலை 12 ஆம் தேதிக்குள்.. அதாவது அடுத்த 5 நாட்களுக்குள்.. இந்தியா, சீனா மற்றும் உலகளவில் மொத்தம் 13 புதிய ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphone Launches) அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? எந்தெந்த ஸ்மார்ட்போன் சரியாக எந்த தேதியில் அறிமுகம் ஆகும்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

1. சிஎம்எப் போன் 1 (CMF Phone 1): நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் பிராண்ட் தனது முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 மாடலை ஜூலை 8 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளது.

அடுத்த 5 நாட்களில் அறிமுகமாகும் 13 புதிய ஸ்மார்ட்போன்கள்!

பிளிப்கார்ட் யூட்யூப்பில் தோன்றிய மினி பேனர் விளம்பரத்தின்படி, சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.17,999 க்கு அறிமுகமாகும். ஆனால் அறிமுக தள்ளுபடிக்கு பிறகு அதன் விலை ரூ.14,999 ஆக குறைக்கப்படும். இங்கே தள்ளுபடி என்று குறிப்பிடப்படுவது எக்ஸ்சேன்ஜ் போனஸ் மற்றும் வங்கி / கார்டு டிஸ்கவுண்ட் ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கலாம்.

2. ரியல்மி ஜிடி 6 (Realme GT 6): இது இந்தியாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி 6 மாடலை போல் இல்லாமல், சற்றே வேறுபட்ட மாடலாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஸ்மார்ட்போனாகும். இது ஜூலை 9 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

3. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G): ரெட்மி நிறுவனத்தின் இந்த புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. லீக்ஸ் தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அறிமுக சலுகையாக ரூ.1,000 கேஷ்பேக் அறிவிக்கப்படலாம்.

4. டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி (Tecno Spark 20 Pro 5G): ரெட்மிக்கு போட்டியாக டெக்னோ நிறுவனமும் தனது புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை ஜூலை 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்திய சந்தையில் இது ரூ.12,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G): மோட்டோரோலா நிறுவனமும் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. ஆனால் இது பட்ஜெட் விலைக்கு வராது. ஜூலை 10 இல் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.24,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

6. லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G): லாவா நிறுவனமும் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. நிச்சயம் இது ஒரு பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனாகவே இருக்கும். ஜூலை 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 என்கிற விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6): சாம்சங் நிறுவனத்தின் இந்த பிரீமியம் பிலாக்ஷித் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 10 ஆம் தேதி நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தியாவில் இது ரூ.1,59,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6): 2024 போல்ட் மாடலுடன் சேர்த்து சாம்சங் நிறுவனத்தின் புதிய பிளிப் ஸ்மார்ட்போன் ஆன இதுவும் ஜூலை 10 ஆம் தேதி நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தியாவில் இது ரூ.91,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் (iQOO Neo 9S Pro Plus): ஐக்யூ நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 11 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சீன அறிமுகத்திற்கு பின்னர், இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

10 மற்றும் 11. ஒப்போ ரெனோ 12 சீரீஸ் (Oppo Reno 12 மற்றும் Oppo Reno 12 Pro): ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ சீரிஸை வருகிற ஜூலை 12 ஆம் தேதியன்று அப்கிரேட் செய்கிறது. ஒப்போ ரெனோ 12 5ஜி மாடல் ஆனது ரூ.31,990 க்கும், ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மாடல் ரூ.39,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 மற்றும் 13. ஹானர் மேஜிக் வி3 மற்றும் ஹானர் மேஜிக் விசி3 (Honor Magic V3 and Honor Magic Vs3): கடைசியாக ஜூலை 12 ஆம் தேதியன்று ஹானர் நிறுவனம் அதன் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Upcoming Smartphone Launches This Week in India China Globally on July 9 10 11 and 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X