புதிய 3டி போனை களமிறக்குகிறது ஷார்ப் எலக்ட்ரானிக்ஸ்

Posted By: Staff

புதிய 3டி போனை களமிறக்குகிறது ஷார்ப் எலக்ட்ரானிக்ஸ்
ஷார்ப் நிறுவனம் அக்கஸ் எஸ்ஹஎச்-8298யூ என்ற 3டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

நிச்சயம் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் ஒரு அரிய வகை மாடலை படைத்திருக்கிறது ஷார்ப் நிறுவனம்.

ஷார்ப் எஸ்ஹெச்8298யூ மாடல் 3டி வசதி கொண்ட ஒரு ஸ்மார்ட் போன்.

ஹெச்டிசி இவோ 3டி,எல்ஜி த்ரில் 4ஜி போன் மாடல்களுக்கு ஷார்ப் எஸ்ஹெச்8298யூ ஸ்மார்ட் போன் சரியான போட்டியாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

இந்த மாடல் ஆன்ராய்டு 3டி 1.4 ஜிஹெச்சட் க்வால்காம் ஸ்நாப்டிராகன் சிங்கிள் கோர் பிராசஸர் வசதி கொண்டது.

ஆனால் ஆப்டிமஸ் 3டி ஓஎம்ஏபி டியூவல் கோர் பிராசஸர் மற்றும் இவோ 3டி டியூவல் கோர் 1.2 ஜிஹெச்சட் பிராசஸரின் வேகத்தையும் விட 1.4ஜிஹெச்சட் க்வால் காம் ஸ்னாப்டிராகன் சிங்கில் கோர் பிராசஸரின் வேகம் சற்று குறைவு தான்.

ஆனால் இந்த மாடலில் மிகவும் சிறப்பான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 512 எம்பி ரேம்,2ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ்,1240 எம்ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஷார்ப் ஆன்டாய்டு போன் 4.2 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே வசதி கொண்டது. இந்த வசதியின் மூலமாக 3டி படங்களை பிரத்யேக கூலிங் கிளாஸ் அணியாமலேயே பார்த்து ரசிக்க முடியும்.

இதில் 8 மெகாபிக்ஸல் திறன் கொண்ட கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் வெகு சீக்கிரத்தில் ஜப்பான் நாட்டில் அறிமுகமாகப் போகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்காவிலும் இந்த மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot