மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல OIS கேமரா.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
விவோ பிரியர்கள் மிரளும்படியான டிஸ்கவுண்ட்டில் 3டி அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 16 ஜிபி ரேம், 80W சார்ஜிங் போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்ட விவோ வி30 5ஜி (Vivo V30 5G) போன் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
விவோ வி30 5ஜி அம்சங்கள் (Vivo V30 5G Specifications): இந்த வி30 போனில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவானது, 3டி கர்வ்ட் மாடலாகும். எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் கொண்டிருக்கிறது.

2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. விசிஎஸ் (VCS) சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) வருகிறது. OIS சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஆரா லைட் வருகிறது. 50 எம்பி ஆட்டோபோகஸ் (Autofocus) செல்பீ ஷூட்டர் வருகிறது. மெயின் கேமராவில் ஹை-ரெசொலூஷன், பேனோ, டாக்குமெண்ட்ஸ், சூப்பர்மூன், ஆஸ்ட்ரோ, ப்ரோ, லைவ் போட்டோ, நைட், போர்ட்ராய்டு, மைக்ரோ மூவி மற்றும் டூயல் வியூ போன்ற பல்வேறு பீச்சர்கள் வருகின்றன.
இந்த விவோ வி30 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) உடன் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த விவோ வி30 5ஜி போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி ஆடியோ, பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் IP54 டஸ்ட்/ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் அந்தாமன் ப்ளூ (Andaman Blue), பீகாக் கிரீன் (Peacock Green), கிளாசிக் பிளாக் (Classic Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.3,400 உடனடி டிஸ்கவுண்ட்டோடு விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த டிஸ்கவுண்ட்டை அமேசான் (Amazon) தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த விவோ வி30 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.30,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பட்ஜெட்டில் பக்கா பிரீமியம் டிசைன், கேமரா, பேட்டரி கொண்ட போன் வேண்டுமானால், இந்த மாடலை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








