பொளந்து கட்டுது ஆர்டர்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட், சோனி லைட் ப்யூசன் 800 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 45W ஹைப்பர்சார்ஜ் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு வந்த ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) போனுக்கு பிளிப்கார்ட்டில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த போனின் விவரங்கள் இதோ.
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 Pro 5G Specifications): இந்த ரெட்மியில் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (4nm MediaTek Dimensity 7300 Ultra) எஸ்ஓசி மற்றும் மாலி ஜி615 எம்சி2 (Mali G615 MC2) ஜிபியு கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மிட்-பிரீமியம் லெவலுக்கு எதிர்பார்க்கலாம். 10 5ஜி பேண்ட்கள் சப்போர்ட் உள்ளது.

8 ஜிபி + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்கள் வருகின்றன. இந்த 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் சியோமி ஹைபர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) வருகிறது. 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன், 500 நிட்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது.
1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 240Hz டச் சாம்பிளிங் மற்றும் 480Hz கேமிங் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் போக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) சப்போர்ட் உள்ளது.

இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி போனில் 45W ஹைப்பர்சார்ஜ் (HyperCharge) மற்றும் 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு சிலிகான் கார்பன் டெக்னாலஜி (Silicon Carbon Technology) சப்போர்ட் கிடைக்கிறது. வோல்டேஜ் பூஸ்டர் சிப் (Voltage Booster Chip) இருக்கிறது. ஆகவே, பேட்டரி பர்ஃபாமென்ஸ் பக்கா பிரீமியமாக எதிர்பார்க்க முடியும்.
சோனி லைட் ப்யூசன் 800 (Sony Light Fusion 800) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) இருக்கிறது. 4K வீடியோ ஷூட் மற்றும் 20 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, ஏஐ எரெஸ் ப்ரோ, ஏஐ கட்அவுட், ஏஐ ஸ்மார்ட்சிப், ஏஐ கிளியர் கேப்ச்சர் மற்றும் ஏஐ இமேஜ் எக்ஸ்பான்ஷன் போன்ற பிரத்யேக பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக இன்-பில்ட் ஜெமினி ஏஐ சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரெட்மியில் பாண்டம் பர்பிள் (Phantom Purple), ஐவி கிரீன் (Ivy Green) மற்றும் டைட்டன் பிளாக் (Titan Black) கலர்கள் உள்ளன.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.24,999 பட்ஜெட்டில் வந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் 9 மாதங்களுக்கான நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.23,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








