அசூர விற்பனை.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 64MP கேமரா.. 16GB ரேம்.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அல்ட்ரா பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 64 எம்பி மெயின் கேமரா, 33W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மலிவான பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரியல்மி சி55 (Realme C55) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. வெறும் ரூ.11,000 பட்ஜெட்டுக்கு வந்திருக்கும் இந்த ரியல்மி சி55 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி சி55 அம்சங்கள் (Realme C55 Specifications): இந்த ரியல்மியில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் ஏஐ (AI) சப்போர்ட் வருகிறது. இந்த சி55 மாடலில் போர்ட்ராய்டு பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

நைட் மோட் (Night Mode), பொக்கெ ஃபிளார் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait), ஏஐ கலர் போர்ட்ராய்டு (AI Color Portrait), ஏஐ பியூட்டி (AI Beauty), எச்டிஆர் (HDR), ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. டைனாமிக் இமேஜ் ஸ்னாப்ஷாட் (Dynamic Image Snapshot) சப்போர்ட் வருகிறது.
இந்த ரியல்மி சி55 போனின் மெயின் மற்றும் செல்பீ ஷூட்டரில் 1080P வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. ஆகவே, இந்த ரூ.11000 பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகரான பீச்சர்கள் மற்றும் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. இந்த ரியல்மி சி55 போனில் 4 ஜிபி மற்றும் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 டிபிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் வருகிறது. ஆகவே, மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) மற்றும் மாலி கிராபிக்ஸ் வருகிறது.
இந்த ரியல்மி சி55 போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12எம்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் 33W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த போனை ரூ.11,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications