விஸ்வரூப விற்பனை.. ரூ.12,999 போதும்.. 64MP கேமரா.. 16GB ரேம்.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஒட்டுமொத்த ரியல்மி பிரியர்களும் குவியும்படியான டிஸ்கவுண்ட் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 64 எம்பி கேமரா போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட ரியல்மி சி55 (Realme C55) போனுக்கு வழங்கப்படுகிறது.
ரியல்மி சி55 அம்சங்கள் (Realme C55 Specifications): இந்த ரியல்மியில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் வருகிறது. ஆர்ம் மாலி-ஜி52 (ARM Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

அதோடு ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) சப்போர்ட் உள்ளது. 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும்.
அதோடு 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் மினி கேப்சூல் (Mini Capsule) பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது. இது பேஸ் அன்லாக், சார்ஜிங் நோட்டிபிகேஷன்களுக்காக வருகிறது. இந்த ரியல்மி சி55 மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது.
ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்டுள்ளது. ஏஐ பியூட்டி (AI Beauty), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் போட்டோகிராபி (Street Photography) மற்றும் பொக்கே ஃபிளார் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.
இந்த கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியல்மி சி55 போனில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது.
டூயல் சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் உள்ளது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி சி55 போனில் 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
டைப்-சி சார்ஜிங் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது. 189 கிராம் எடை கொண்டுள்ளது. ஸ்லிம் டிசைனில் 7.89 மிமீ தடிமன் வருகிறது. இந்த இந்த ரியல்மி சி55 போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் உள்ளது.
ரைனி நைட் (Rainy Night), சன் ஷோவர் (Sun Shower) மற்றும் ரைன் ஃபாரஸ்ட் (Rainforest) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் ரூ.1000 டிஸ்கவுண்ட்டுடன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனையாகிறது.
இந்த டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். அதோடு எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம். கம்மி பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன் கொண்ட போன் வேண்டுமானால், இதை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








