மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 67W சார்ஜிங்.. வேகன் பேனல்.. எந்த மாடல்?
ஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி, லெதர் பேனல் போன்ற தட்டித்தூக்கும் அம்சங்களை கொண்ட போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி (POCO X6 Pro 5G) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) மிரளவிடும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Pro 5G Specifications): இந்த போக்கோவில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300-அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300-Ultra 4nm) சிப்செட் வருகிறது.
அதோடு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்டுள்ளது. ஆர்ம் மாலி ஜி615 எம்சி6 ஜிபியு (Arm Mali-G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது.
64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி வருகிறது. அதோடு 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. டைப்-சி ஆடியோ வருகிறது.

இந்த போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash Resistant) வருகிறது. இந்த போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. வேகன் லெதர் (Vegan Leather) பேனல் வருகிறது.
அதேபோல பிளாஸ்டிக் (Plastic) பேனலும் இருக்கிறது. இந்த போனில் ஸ்பெக்டர் பிளாக் (Spectre Black), ரேசிங் கிரே (Racing Grey) மற்றும் போக்கோ யெல்லோ (POCO Yellow) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999 ஆக இருக்கிறது.
அதேபோல 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.28,999ஆக இருக்கிறது. இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற மல்டிபிள் வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பெறலாம். இதுவொரு லிமிடெட் டிஸ்கவுண்ட் ஆஃபராகும்.


Click it and Unblock the Notifications








