Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.19,999 பட்ஜெட்ல 16GB ரேம்.. OIS கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தள்ளுபடியில் 16 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5100mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்ட போக்கோ எக்ஸ்6 5ஜி (POCO X6 5G) போன் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

போக்கோ எக்ஸ்6 5ஜி அம்சங்கள் (POCO X6 5G Specifications): இந்த போக்கோவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.19999 பட்ஜெட்ல 16GB ரேம்.. OIS கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த போன்?

6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு (Corning Gorilla Glass Victus Protection) கொண்டிருக்கிறது.

அதோடு எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. அதுமட்டுமல்லாமல், சன்லைட் மோட் (Sunlight Mode), ரீடிங் மோட் (Reading Mode) மற்றும் சைக்கிள் மோட் (Cycle Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. அதோடு ஷார்ட் ஃபிலிம் (Short Film), ஸ்லோவ் மோஷன் (Slow Motion, டைம் லேப்ஸ் (Time-lapse) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது.

அதோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டிருக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த போக்கோ எக்ஸ்6 5ஜியில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் மிரர் பிளாக் (Mirror Black) மற்றும் ஸ்னோவ்ஸ்டார்ம் ஒயிட் (Snowstorm White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது.

ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.2000 உடனடி தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card) மற்றும் டெபிட் கார்டு (Debit Card) பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on POCO X6 5G With 16GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X