பிச்சிக்குது விற்பனை.. ரூ.16187 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த போன்?
108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 120Hz டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 67W சார்ஜிங் போன்ற பக்கா பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) போனானது, கிடைக்காத பட்ஜெட்டுக்கு வந்துள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications): இந்த நோர்ட் போனில் 3எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் (3x Lossless Zoom) சப்போர்ட் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), பொக்கெ ஃபிளார் ஃபில்டர் (Bokeh Flare Filter) மற்றும் மல்டி ஆட்டோபோகஸ் (Multi Autofocus) சப்போர்ட் உள்ளது.
அதேபோல டூயல் வியூ வீடியோ (Dual-view Video), நைட்ஸ்கேப் (Nightscape), ரீடச்சிங் (Retouching) போன்ற பீச்சர்களும் கொண்டிருக்கிறது. மேலும், 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இதே பீச்சர்களுடன் பேஸ் அன்லாக் சப்போர்ட் உடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
இந்த செல்பீயில் சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சார் வருகிறது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனின் கேமரா பட்ஜெட்டிலும் பிரீமியம் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி அவுட்புட் கொடுக்கும். 5000mAh பேட்டரி வருகிறது. 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) கொண்டிருக்கிறது.
இந்த மாடலின் டிஸ்பிளேவை பார்க்கையில், 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) பேனல் கொண்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
இதுபோக அசாஹி டிராகன்டெயில் ஸ்டார் கிளாஸ் புரொடெக்சன் (Asahi Dragontail Star Glass Protection) கொண்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் மற்றும் ஆக்சிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. 8 ரேம் + 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. பாஸ்டல் லைம் (Pastel Lime) மற்றும் குரோமேடிக் கிரே (Chromatic Gray) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 மெமரி மாடலின் விலை ரூ.17,437ஆக இருக்கிறது.
இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் சலுகையை சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.16,187 வாங்கலாம். இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டப்போது, ரூ.19,999ஆக விலை இருந்தது.


Click it and Unblock the Notifications








