Home
Mobile

OnePlus சேல்.. அடிமட்ட விலையில் Nord போன்.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையில் (OnePlus Red Rush Days Sale) பிரீமியம் மெட்டல் பாடியில் 5500mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) போனுக்கு இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த விற்பனை பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி வரையில் மட்டுமே நடக்கிறது. ஆகவே, இப்போதே ஆர்டர் செய்துகொள்ளுங்கள்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.28,999 விலைக்கும், 12 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.31,999 விலைக்கும் கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

OnePlus சேல்.. அடிமட்ட விலையில் Nord போன்.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh!

அதாவது, ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.24,999 பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரூ.4000 டிஸ்கவுண்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

மேலும், ரூ.27,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் நல்ல லாபத்தில் இப்போது ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ரூ.25000 பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி கொடுக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இது மெட்டல் பாடியில் கிடைப்பதால், செக்மெண்ட்டில் டாப்பில் இருக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி அம்சங்கள் (OnePlus Nord 4 5G Specifications): இந்த போனில் ஒன்பிளஸ் இன்டலிஜென்ஸ் (OnePlus Intelligence) மற்றும் ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face) மற்றும் ஏஐ கட்அவுட் (AI Smart Cutout) போன்ற பீச்சர்களுடன் டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) கிடைக்கிறது.

ஆகவே, ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி வைடு மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 20X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

இந்த நோர்ட் போனில் சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (4nm Octa Core Snapdragon 7+ Gen 3) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மேலும், ஆக்ஸிஜன்ஓஎஸ் 14.1 (OxygenOS 14.1) மற்றும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த நோர்ட் போனில் 5500mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on OnePlus Nord 4 5G With 8GB RAM in Red Rush Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X