Home
Mobile

அசூர விற்பனை.. வெறும் ரூ.13499 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜ்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Freedom Festival Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை தட்டித் தூக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X) போனானது, ஆர்டருக்கு கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, அமோலெட் பேனல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024 (Great Freedom Festival 2024) தொடங்கி இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட மாடல்கள் பட்ஜெட்டில் கிடைக்கின்றன. இப்படி 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி கேமரா, 5000mAh பேட்டரி பீச்சர்களை கொண்ட லாவா பிளேஸ் எக்ஸ் இப்போது அடிமட்ட விலையில் கிடைக்கிறது.

அசூர விற்பனை.. வெறும் ரூ.13499 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா போன்!

லாவா பிளேஸ் எக்ஸ் விலை (Lava Blaze X Price): இந்த லாவா போனில் 8ஜிபி ரேம் (4ஜிபி + 4ஜிபி விர்ச்சுல்) + 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 12ஜிபி ரேம் (6ஜிபி + 6ஜிபி விர்ச்சுல்) + 128ஜிபி மாடலின் விலை ரூ.15,999ஆகவும், 16ஜிபி ரேம் (6ஜிபி + 6ஜிபி விர்ச்சுல்) + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது.

இப்போது, கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.1500 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, வெறும் ரூ.13,499 பட்ஜெட்டில் இந்த லாவா பிளேஸ் எக்ஸ் போனை வாங்கி கொள்ளலாம். ஸ்டார்லைட் பர்பிள் (Starlight Purple) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

லாவா பிளேஸ் எக்ஸ் அம்சங்கள் (Lava Blaze X Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் 2 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15) அப்கிரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உள்ளது.

அசூர விற்பனை.. வெறும் ரூ.13499 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா போன்!

இதுவொரு 5ஜி சிப்செட் மாடலாகும். அதேபோல மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. இந்த லாவா எக்ஸ் மாடலில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியல் கேமரா சிஸ்டம் வருகிறது. மெயின் கேமராவில் சோனி (Sony) சென்சார் வருகிறது.

இந்த பட்ஜெட்டில் மற்ற நிறுவனங்கள் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கின்றன. ஆனால், இந்த லாவா பிளேஸ் எக்ஸ் போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. ஆகவே, மிட்-ரேஞ்ச் போன்களிள் கிடைக்கும் டிஸ்பிளே அவுட்புட் இந்த பட்ஜெட் மாடலிலும் எதிர்பார்க்கலாம். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது.

இந்த லாவா பிளேஸ் எக்ஸ் போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) உள்ளது. கம்மியான பட்ஜெட்டில் கேமரா, டிஸ்பிளே பீச்சர்கள் பக்காவாக வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on Lava Blaze X in Amazon Great Freedom Festival 2024 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X