யாருமே எதிர்பார்க்கல.. ரூ.9998 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Lava 5ஜி போன்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்கின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் லாவா பிளேஸ் 3 5ஜி (Lava Blaze 3 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.9998 விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா பிளேஸ் 3 5ஜி அம்சங்கள் (Lava Blaze 3 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Dimensity 6300 6nm) சிப்செட் வசதியுடன் இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போன் வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி 2.5டி கர்வ்டு (LCD 2.5D Curved) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 × 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி ஏஐ கேமரா கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றி கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (side-facing fingerprint scanner) வசதியைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போன். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன. கிளாஸ் ப்ளூ (Glass Blue) மற்றும் கிளாஸ் கோல்ட் ( Glass Gold) ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.1 ( Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications