Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. வெறும் ரூ.10999 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சீன நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 50 எம்பி மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம், 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் மற்றும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கொடுக்கும் லாவா பிளேஸ் 3 5ஜி (Lava Blaze 3 5G) போனின் விற்பனை அமேசான் (Amazon) தளத்தில் தொடங்கி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ரூ.10000 பட்ஜெட் போன்களில் சீன நிறுவனங்கள் மட்டுமே பிரீமியம் டிசைன் மற்றும் ஒரு சில மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொடுத்து வந்தன. இந்த நிறுவனங்களுக்கு நிகராக இந்தியாவின் லாவா நிறுவனம், பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களை களமிறக்க தொடங்கிவிட்டது. இப்போது, லாவா பிளேஸ் 3 5ஜி போன் மூலம் கஸ்டமர்களை தட்டித் தூக்கியே விட்டது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.10999 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா போன்!

ஏனென்றால், கம்மியான பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுத்தது மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. அதேபோல கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் டைமன்சிட்டி சிப்செட்டை பேக் செய்துள்ளது. முதலில் பீச்சர்களை பார்ப்போம்.

லாவா பிளேஸ் 3 5ஜி அம்சங்கள் (Lava Blaze 3 5G Specifications): இந்த லாவா போனில் 6.56 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) பஞ்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளே 2.5டி கர்வ்ட் டிசைனில் (Curved Design) வருகிறது.

மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கிறது. ஆகவே, மீடியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த லாவா பிளேஸ் மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

இதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட்டை பேக் செய்திருக்கிறது. 50 எமபி மெயின் கேமரா + 2 எம்பி AI லென்ஸ் வருகிறது. இந்த கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ வீடியோ மோட் (Pro Video Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல டூயல் வியூ வீடியோ (Dual View Video), குரூப் போட்டோ (Group Photo), ஏஐ மோட் (AI Mode) உள்ளிட்ட பீச்சர்களும் வருகின்றன. இந்த லாவாவில் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. அடிமட்ட பட்ஜெட்டிலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) பேக் செய்யப்பட்டுள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது.

இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 8.6 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடை வருகிறது. 5ஜி கனெக்டிவிட்டி வருகிறது. கிளாஸ் ப்ளூ (Glass Blue) மற்றும் கிளாஸ் கோல்டு (Glass Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,499 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம். ரூ.10000 பட்ஜெட்டில் பக்கா போன் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இது நல்ல தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
12 Percent Discount on Lava Blaze 3 5G With 12GB RAM in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X