Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.34000 பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. SONY கேமரா.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) சோனி சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, எச்டிஆர்10பிளஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 120W ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட 5160mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், டூயல்-டோன் லெதர் பேனலுடன் வெளியான ஐக்யூ நியோ 9ப்ரோ (iQOO Neo 9 Pro) போனானது, அறக்க பறக்கும் டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஐக்யூ நியோ9 ப்ரோ மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 9ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro Specifications): இந்த ஐக்யூ போனானது, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி இருந்தாலும், கேமரா, பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக வருகின்றன. சோனி ஐஎம்எக்ஸ்920 (IMX920) சென்சார், விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) சிப் மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.34000 பட்ஜெட்ல 120W சார்ஜிங் மாடல்!

அதோடு 8 எம்பி அல்ட்ரை வைடு ஆங்கிள் கேமரா உடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மெயின் கேமராவில் 4K மற்றும் செல்பீ கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 (Android 14), ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) மற்றும் அட்ரினோ 730 ஜிபியு கிராபிக்ஸ் உள்ளது.

இந்த ஐக்யூ நியோ 9ப்ரோவில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது. 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் உள்ளது. மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) வருகிறது. மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.34000 பட்ஜெட்ல 120W சார்ஜிங் மாடல்!

இந்த ஐக்யூ நியோ 9ப்ரோ போனின் பேட்டரி சிஸ்டம் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5160mAh பேட்டரி வருகிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கொடுக்கும் மாடலாக இந்த போன் இருக்கும். பீரி ரெட் (Fiery Red) மற்றும் கான்கியூரர் பிளாக் (Conqueror Black) கலர்களில் கிடைக்கிறது.

ஐக்யூ நியோ 9ப்ரோ விலை (iQOO Neo9 Pro Price): இந்த ஐக்யூவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை இப்போது அமேசான் (Amazon) தளத்தில் ரூ.36,999ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலையிலும் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இது எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.34,999 பட்ஜெட்டில் இந்த மாடலை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on iQOO Neo9 Pro With 5160mAh Battery in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X