இது வேற ரகம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 16GB ரேம்.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 120W சார்ஜிங், 5160mAh பேட்டரி, 16ஜிபி ரேம் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட ஐக்யூ நியோ9 ப்ரோ (iQOO Neo9 Pro) போனானது, அமேசான் தளத்தில் நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஐக்யூ நியோ9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo9 Pro Specifications): இந்த ஐக்யூ மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. அதோடு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் வருகிறது.

அதேபோல அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. இந்த போனில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கிறது.
அதேபோல 24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி டைனாமிக் மெமரி) + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் மற்றும் விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) சிப் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (Ultra-wide Angle Camera) உடன் டூயல் ரியர் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) மற்றும் நைட் வீடியோ மோட் (Night Video Mode) வருகிறது. 16 எம்பி செல்பீ கேமராவானது, 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டுடன் வருகிறது.

இந்த ஐக்யூ நியோ9 ப்ரோ போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது.
3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.
இந்த ஐக்யூ நியோ9 ப்ரோ போனில் 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் (Ultra Fast Flash Charging) வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி கொண்டுள்ளது. இதுவொரு 5ஜி மாடலாகும். பீரி ரெட் (Fiery Red) மற்றும் கான்கியூரர் பிளாக் (Conqueror Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இன்று, அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை தொடங்கிவிட்டது.
அதோடு ரூ.1000 அறிமுக சலுகை மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.34,999க்கு வாங்கலாம். அதேபோல 12 ஜிபி ரேம் மாடலை ரூ.36,999க்கு வாங்கலாம். 8ஜிபி + 128ஜிபி மாடலின் விற்பனை மார்ச் மாதம் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications