Home
Mobile

SALE அடிச்சு தூக்குது.. நேரடியாக ரூ.13,401 ரேட் கட்ல iPhone வருது.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025 (Flipkart Independence Day Sale 2025) சலுகையில் ஐபோன் 16 (iPhone 16) மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, 48 எம்பி மெயின் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. சிக்ஸ்-கோர் ஏ18 3என்எம் சிப்செட் கொண்ட இந்த ஐபோன் 16 மாடலின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 மாடலின் விலை ரூ.66,999ஆக இருக்கிறது. ஆனால், இதன் மார்கெட் விலை ரூ.79,990ஆக இருக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.12,991 விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.66,499 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

SALE அடிச்சு தூக்குது.. நேரடியாக ரூ.13,401 ரேட் கட்ல iPhone வருது!

இந்த ரூ.12,991 விலை குறைப்பு மற்றும் ரூ.3,500 தள்ளுபடி போக மொத்தமாக ரூ.13,401 விலை கம்மியான 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 மாடலை வாங்கி கொள்ளலாம். மேலும், டெபிட் கார்டு தள்ளுபடி, ஈஎம்ஐ தள்ளுபடி போன்ற சலுகைகளும் பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனையில் கிடைக்கிறது. செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் கொடுக்கிறது.

ஆக்சன் பட்டன் மற்றும் எக்ஸ்டர்னல் கேமரா கன்ட்ரோல் கிடைக்கிறது. இந்த ஐபோன் 16 மாடலுக்கு IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த டிசைனுடன் டைட்டானியம் பாடி கிடைக்கிறது. பிளாக், ஒயிட், பிங்க், டீல் மற்றும் அல்ட்ரா மரைன் போன்ற பல்வேறு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இப்போது, பீச்சர்களை பார்ப்போம்.

ஐபோன் 16 அம்சங்கள் (iPhone 16 Specifications): இந்த ஐபோன் காம்பாக்ட் மாடலாக இருப்பதால், 6.1 இன்ச் (2556 x 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொடுக்கிறது. இது வழக்கமான ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கொண்ட சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடலாகும். இதில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

முன்பே சொன்னதை போல செராமிக் ஷீல்டு மற்றும் எச்டிஆர் சப்போர்ட் வருகிறது. 48 எம்பி மெயின் கேமரா (வைடு-ஆங்கிள்) மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (ஆட்டோ போகஸ் + மேக்ரோ போட்டோகிராபி) கிடைக்கிறது. சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் டெக்னாலஜி, 2X டெலிபோட்டோ, போகஸ் பிக்சல் மற்றும் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) கிடைக்கிறது.

பிரீமியம் ஆப்பிள் போன்களில் கிடைக்கும் ட்ரூ டோன் ஃபிளாஷ் மற்றும் சினிமாடிக் மோட் கிடைக்கிறது. டால்பி விஷனில் ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். மேலும், ரெடினா ஃபிளாஷ் கொண்ட 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் ஆட்டோ போகஸ், போகஸ் பிக்சல், டால்பி விஷன் போன்ற மெயின் கேமராவில் கிடைத்த பீச்சர்கள் வருகின்றன.

இந்த ஐபோன் 16 மாடலில் சிக்ஸ்-கோர் ஏ18 3என்எம் (Six Core A18 3nm) சிப்செட் மற்றும் 5 கோர் ஜிபியு (5 core GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது. ஆக்சன் பட்டனில் போகஸ், ஃபிளாஷ், டிரான்ஸ்லேட் போன்ற கன்ட்ரோல்கள் வருகிறது. கேமரா கன்ட்ரோலில் டெப்த், ஜூம், ஸ்டைல் மற்றும் டோன் போன்றவை வருகின்றன. 25W சார்ஜிங், 22 ஹவர்ஸ் பேக்கப் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on iPhone 16 in Flipkart Independence Day Sale 2025 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X