2024 முதல் மாசமே.. களைகட்டுது! 20 நாட்களுக்குள்.. இந்தியாவில் அறிமுகமாகும் 12 புதிய போன்கள்! இதோ லிஸ்ட்!
2024 ஆம் ஆண்டின் முதல் மாதமே களைகட்டுகிறது. ஏனென்றால் ஜனவரி 4 முதல் ஜனவரி 23 ஆம் தேதிக்குள்.. ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 12 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. என்னென்ன மாடல்கள் எந்த தேதியில்.. என்ன விலைக்கு அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:
எந்தெந்த நிறுவனங்கள் 2024 ஜனவரியில் தத்தம் புதிய போன்களை அறிமுகம் செய்யவுள்ளன? ரெட்மி (Redmi), ஒன்பிளஸ் (OnePlus), சாம்சங் (Samsung), விவோ (Vivo) மற்றும் ஒப்போ (Oppo) ஆகிய 5 பிராண்டுகளும், 2024 புத்தாண்டை தங்களது புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துடன் தொடங்க திட்டமிட்டு உள்ளன.

01. ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series): ஷாவ்மீயின் துணை நிறுவனமான ரெட்மி வருகிற ஜனவரி 4 ஆம் தேதி அன்று அதன் ரெட்மி நோட் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் கீழ் ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.
விலை விவரங்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும்: 6ஜிபி + 128ஜிபி, 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி. இவைகளின் எம்ஆர்பி முறையே ரூ.20,999, ரூ.22,999 மற்றும் ரூ.24,999 ஆக இருக்கலாம். விற்பனை விலை எம்ஆர்பி-ஐ விட குறைவாகவே இருக்கும். இது ரூ.18,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமாகலாம்.

இதேபோல ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலும் 8ஜிபி + 128ஜிபி, 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி என் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகலாம். இவைகளின் எம்ஆர்பி முறையே ரூ.28,999, ரூ.30,999 மற்றும் ரூ.32,999 ஆக இருக்கலாம்.
கடைசியாக உள்ள ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனும் 8ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி என் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும். இவைகளின் எம்ஆர்பி முறையே ரூ.33,999, ரூ.35,999 மற்றும் ரூ.37,999 ஆக இருக்கலாம். மேற்கண்ட விலைகளில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

02. விவோ எக்ஸ்100 சீரீஸ் (Vivo X100 Series): ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்ட விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜனவரி 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. விவோ எக்ஸ்100 சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ என 2 மாடல்கள் அறிமுகமாக உள்ளன.
விலை விவரங்களை பொறுத்தவரை இந்தியாவில் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.63,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். விவோ எக்ஸ்100 ப்ரோவின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

03. ஒன்பிளஸ் 12 சீரீஸ் (OnePlus 12 Series): ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மாடல்களை உள்ளடக்கிய ஒன்பிளஸ் 12 சீரீஸ் வருகிற ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஒன்பிளஸ் 12 ரூ.58,000 - ரூ. 60,000 க்குள்ளும், ஒன்பிளஸ் 12ஆர் ரூ.40,000 - ரூ.42,000 க்குள்ளும் அறிமுகம் செய்யப்படலாம்.
04. ஒப்போ ரெனோ 11 சீரிஸ் (Oppo Reno 11 Series): ஒப்போவின் புதிய ரெனோ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜனவரி 10 அல்லது 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சீரிஸின்கீழ் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும்.

05. சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series): சாம்சங்கின் பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்24 சீரீஸின் உலகளாவிய வெளியீடு ஜனவரி 2024 நடுப்பகுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சீரிஸின்கீழ் கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications