புதிய டியூவல் சிம் போனை அறிமுகப்படுத்தியது லாவா

இந்த மொபைலின் வடிவமைப்பை பார்த்தால், அதன் மேல் இருந்து கண்களை அகற்றவே முடியாது. அவ்வளவு அழகான மற்றும் நுட்பமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. லாவா கேகேடி-39 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. 2 இஞ்ச் க்யூவிஏ திரை கொண்டுள்ளதால் 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் துல்லியத்தைக் கொடுக்கிறது.
லாவா கேகேடி-39 மொபைல் 0.3 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. 16 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதில் நீடித்து உழைக்கும் 1,400 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
யூஎஸ்பி மற்றும் புளூடூத் பயன்பாட்டினை முழுமையாகப் பெற முடியும். இதில் பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஜி-சென்ஸார் வசதியும் உள்ளது. பொழுதுபோக்கு அம்சமாக மல்டி மீடியா வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
லாவா கேகடி-39 மொபைல் ரூ.5,000 விலைக்கும் குறைவாகக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications