Home
Mobile

மொபைல்களுக்கு 12 புதிய அப்ளிகேஷன்களை இலவசமாக வழங்கும் ப்ளாக்பெர்ரி

By Super
மொபைல்களுக்கு 12 புதிய அப்ளிகேஷன்களை இலவசமாக வழங்கும் ப்ளாக்பெர்ரி
வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். 12 புதிய அப்ளிகேஷன்களை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

சிம்ஸ்-3 இணையதளத்திலிருந்து இதற்கான அப்ளிகேஷன்களை டவுண்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவித்க்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் அனிமேஷன் வீடியோ கேம்களை, மிக துல்லியமான சவுண்ட் எபெக்ட்டுடன் விளையாட முடியும்.

தவிர, டுட்டோரியல், மல்டிபிளேயர் மோட் போன்ற வசதிகளுக்கு உதவுகிறது. இந்த அப்ளிகேஷன் சோஷியல் மற்றும் நெட்வொர்க் கேமிங் வசதியைக் கொண்டது.

இதில் டெக்சாஸ் ஹோல்டு'எம் போக்கர் 2 என்ற கேம் கொடுக்கப்பட்டுள்ளது.அதோடு அனைவருக்கும் விளையாடத் தூண்டும் பபுல் பேஷ்-2 கேம் உள்ளது. இந்த கேமை விளையாட ஆரம்பித்தால் நிறுத்தவே தோன்றாது. அந்த அளவுக்கு ஆர்வத்தைக்கொடுக்கும். பபுல் பேஷ்-2 கேமில் 100 லெவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஐஸ் கோல்ட் என்ற அப்ளிக்கேஷன் உள்ளது. இது ஃபோட்டோ எடிட்டிங் வசதியைக் கொடுக்கிறது. இதை ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைகளில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த வசதியினால் ஒரு ஃபோட்டோவில் பிரைட்னஸ், ரீசைஸ், ஆல்டர், அட்ஜஸ்ட் போன்றவற்றை செய்து, அந்த ஃபோட்டோவை இன்னும் சிறந்ததாக மாற்ற முடியும்.

அதோடு டிரைவ் சேஃப்லி என்ற ஒரு அப்ளிகேஷனும் உள்ளது. இதில் உள்ள நோபெக்ஸ் ரேடியோ மூலம் 16,000 ஸ்டேஷன்களை துல்லியமாக கேட்க முடியும்.

ஷாசம் என்ற அப்ளிக்கேஷனைப் பயன்படுத்தி, இ-மெயில், டிவிட்டர், டெக்ஸ்ட்/ஃபேஸ்புக் போன்ற வசதிகளையும் பெற முடியும். இத்தனை அப்ளிக்கேஷன்களையும் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியை பிளாக்பெர்ரி மொபைல்களில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X