வாட்டர் ப்ரூப் திறமை கொண்ட டாப் 11 ஸ்மார்ட்போன்கள்.!

மெட்டல் மற்றும் கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட இவற்றில், எக்ஸ்இசட்2 5.7-இன்ச் கொண்டு அளவில் பெரிதாக உள்ளது.

|

ஒவ்வொரு ஃபோனிலும் நீர் புகாத திறன் இருந்தால், கடற்கரை, நீச்சல் குள விருந்துகள், படகு பயணங்கள் மற்றும் நீர் கேளிக்கை பார்க்குகள் போன்ற இடங்களுக்கு எந்தப் பயமும் இல்லாமல் நம் ஸ்மார்ட்போன்களை எடுத்து செல்ல முடியும். இந்நிலையில் சமீபகாலத்தில் நம்மை கவர்ந்த, நீரில்தாக்குபிடிக்கும் 11 ஸ்மார்ட்போன்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

எல்ஜி ஜி7 திங்க்

எல்ஜி ஜி7 திங்க்

எல்ஜி நிறுவனத்தின் நவீன ஜி7 ஃபோனில் உள்ள ஒரு ஏஐ கேமரா மூலம் படம் எடுக்கும் முன்பே, படத்திற்கு தேவையான கூடுதல் அம்சங்கள் அனைத்தையும் அளிக்கிறது. மேலும் கூகுள் அசிஸ்டெண்ட்டிற்கு என்றே ஒதுக்கப்பட்ட ஒரு பொத்தானைக் கொண்ட முதல் ஃபோன் ஆகும்.

 சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ்

கடந்தாண்டின் மாடலை விட, தற்போதைய புதிய 5.8-இன்ச் கேலக்ஸி எஸ்9 (மற்றும் எஸ்9 பிளஸ்) அதிக விலைக் கொண்டதாக இருந்தாலும், குறைந்த ஒளியில் படமெடுக்கும் திறன் அதன் போட்டியாளர்களுக்கு சவாலாக அமையவில்லை. அதே நேரத்தில் அதன் சிறந்த ஆற்றல் மிகுந்த செயலி, நீண்ட பேட்டரி திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவை தற்போது நிலவி உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு ஃபோன்களில் ஒன்றாக நிலை நிறுத்தி உள்ளது.

 ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

ஒரு 5.8-இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, மிகவும் மெல்லிய பேசில்கள் மற்றும் இரு பின்பக்க கேமராக்களிலும் ஆப்டிக்கல் பட நிலைப்புத் தன்மை ஆகியவற்றை கொண்ட இந்த ஃபோன், அமெரிக்காவில் $999-யும் இங்கிலாந்தில் £999-யும் ஆஸ்திரேலியாவில் AU$1,579-யும் என்று ஐபோன்களிலேயே அதிக விலைக் கொண்டதாகத் திகழ்கிறது.

 கூகுள் பிக்ஸல் 2

கூகுள் பிக்ஸல் 2

இதில் சிறப்பான 12-மெகாபிக்ஸல் கேமரா இருப்பது இதன் சிறப்பாகும். மேலும் வேகமான ஸ்னாப்டிராகன் 835 செயலி, கூகுள் நிறுவனம் அளிக்கும் காலத்திற்கேற்ற புதுப்பிப்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

நோக்கியா 8 சிரோகோ

நோக்கியா 8 சிரோகோ

திரையின் ஓரம் வரையுள்ள 5.5-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் உட்படுத்திய இரு பின்பக்கத்தை நோக்கிய கேமராக்கள் ஆகியவை இதன் சிறப்பாகும்.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசட்2 மற்றும் எக்ஸ்இசட்2 காம்பேக்ட்

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசட்2 மற்றும் எக்ஸ்இசட்2 காம்பேக்ட்

மெட்டல் மற்றும் கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட இவற்றில், எக்ஸ்இசட்2 5.7-இன்ச் கொண்டு அளவில் பெரிதாக உள்ளது. எக்ஸ்இசட்2 காம்பேக்ட் 5-இன்ச் கொண்டிருந்தாலும் ஏறக்குறைய எக்ஸ்இசட்2 இன் எல்லா முக்கிய அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் உள்ள வயர்லெஸ் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் 845 செயலி மற்றும் 19-மெகாபிக்ஸல் பின்பக்க கேமரா ஆகியவை கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ்

நீரில் இருந்து பாதுகாப்பு என்பதையும் கடந்து, மெட்டல் பாடியைக் கொண்ட இந்த ஃபோன் அதிர்ச்சியை மேற்கொள்வதாகவும் 4,000எம்ஏஹெச் என்ற அளவிலான பேட்டரி திறனையும் பெற்றுள்ளது. ஆனால் இது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது.

 மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4

இதில் நீர் புகாத தன்மையை தவிர, இரு பின்பக்க கேமராக்கள், என்எஃப்சி மற்றும் விரிவாக்கம் செய்யக் கூடிய நினைவகம் ஆகியவை உள்ளன. மேலும் பல உபயோகமான சாஃப்ட்வேர்களையும் கொண்டுள்ளது.

ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ்

ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ்

இதில் புதிதாக ஸ்டீல் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கிளாஸ் பின்பலம், புதிய இமேஜ் சிக்னல் செயலி உடன் கூடிய சிறந்த கேமராக்களும் சென்ஸர்களும் இருப்பதோடு வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
சாம்சங் கேலக்ஸி நோட் 8

சாம்சங் கேலக்ஸி நோட் 8

சற்று விலை கூடுதல் என்றாலும் இரட்டை கேமராக்களைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் பிக்ஸ்பை, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், முகம் கண்டறிந்து அன்லாக் செய்யும் வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு, அதிக அம்சங்களைக் கொண்ட ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

 எல்ஜி வி30எஸ் திங்க் மற்றும் வி30

எல்ஜி வி30எஸ் திங்க் மற்றும் வி30

இவை இரண்டும் பெரும்பாலான காரியத்தில் ஒத்திருக்கும் நிலையில், 6-இன்ச் திரை, விரிந்த கோணத்தில் அமைந்த கேமரா, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் நீர் புகாத வடிவமைப்பு ஆகியவற்றை பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
11 waterproof phones you'll want right now; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X