இந்த 11 Samsung போன்களில் 1 வாங்கினாலும் லக்கு.. வச்சி இருந்தாலும் லக்கு!

|

பல வகையான விலைப்பிரிவுகளின் கீழ் எத்தனையோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு கொண்டே இருந்தாலும் கூட..Samsung ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் எந்த சறுக்கலும் இல்லை!

ஏனென்றால்.. நம்மில் பலருக்கும் Android OS-ஐ அறிமுகம் செய்ததே சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தான்!

நம்மில் பலருக்கு Samsung தான் முதல் Android போன்!

நம்மில் பலருக்கு Samsung தான் முதல் Android போன்!

இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், நோக்கியாவை கைவிட்ட 100 க்கு 80 பேர்களின் கைகளுக்குள் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன் என்றால்.. அது சாம்சங் ஆகத்தான் இருக்கும்!

மிகவும் எளிமையான ஆன யூஸர் இன்டர்பேஸ் (User Interface) உடன், விலைக்கு ஏற்ற தரமான ஸ்மார்ட்போன்களை வழங்குவதே சாம்சங் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்!

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

அதனொரு பகுதியாக?

அதனொரு பகுதியாக?

இந்த 2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள், குறிப்பிட்ட 11 சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் லேட்டஸ்ட் ஓஎஸ்அப்டேட் கிடைக்க உள்ளது.

நினைவூட்டும் வண்ணம், கூகுள் (Google) நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான (Mobile operating system) ஆன ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது.

அதனை தொடர்ந்து One UI 5.0!

அதனை தொடர்ந்து One UI 5.0!

அதனை தொடர்ந்து, பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சாம்சங், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த One UI 5.0-வின் பீட்டா வெர்ஷனை அதன் சில கேலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வெளியிட தொடங்கியது.

இருப்பினும் நேற்று வரையிலாக, எந்தெந்த சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கெல்லாம் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் அணுக கிடைக்கும் என்பது குறித்த சரியான தகவல்கள் வெளியாகவில்லை!

விலை குறைக்கலாம்! அதுக்காக இப்படியா? Amazon ஆபர் மழையில் 4 Samsung போன்கள்!விலை குறைக்கலாம்! அதுக்காக இப்படியா? Amazon ஆபர் மழையில் 4 Samsung போன்கள்!

ஆனால் இன்று அப்படி இல்லை!

ஆனால் இன்று அப்படி இல்லை!

எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள், நிறுவனத்தின் சொந்த One UI 5.0 அப்பேட்டை எப்போது பெறும் என்கிற விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது!

சாம்மொபைலின் (SamMobile) வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, குறிப்பிட்ட 11 சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஸ்டேபிள் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான One UI 5.0 அப்டேட்டை பெறும்.

Android 13 ஓஎஸ்-ஐ பெறும் எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்:

Android 13 ஓஎஸ்-ஐ பெறும் எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்:

முதலில், இந்த 2022 ஆம் ஆண்டுக்குள் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை பெற உள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்த்து விடுவோம்!

- சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22)
- சாம்சங் கேலக்ஸி எஸ்22+ (Samsung Galaxy S22+)
- சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா (Samsung Galaxy S22 Ultra)
- சாம்சங் கேலக்ஸி எஸ்21 (Samsung Galaxy S21)
- சாம்சங் கேலக்ஸி எஸ்21+ (Samsung Galaxy S21+)
- சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா (Samsung Galaxy S21 Ultra)

யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை "வாய் பிளக்க" வைக்கும் இந்தியா!

ஆண்ட்ராய்டு13 ஓஎஸ்-ஐ பெறும் Fold மற்றும் Flip போன்கள்:

ஆண்ட்ராய்டு13 ஓஎஸ்-ஐ பெறும் Fold மற்றும் Flip போன்கள்:

அடுத்ததாக, இந்த 2022-க்குள் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ பெறும் ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் மாடல்களின் பட்டியலை பார்ப்போம்!

- சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4)
- சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 (Samsung Galaxy Z Flip 4)
- சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 (Samsung Galaxy Z Fold 3)
- சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 (Samsung Galaxy Z Flip 3)

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ பெறும் A-Series ஸ்மார்ட்போன்:

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ பெறும் A-Series ஸ்மார்ட்போன்:

இந்த 2022 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை பெறும் சாம்சங் நிறுவனத்தின் ஒரே மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் எதுவென்றால், அது சாம்சங் கேலக்ஸி ஏ53 (Samsung Galaxy A53) ஆகும்.

மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!

இந்த அப்டேட் M-Series மற்றும் F-Series மாடல்களுக்கு எப்போது வரும்?

இந்த அப்டேட் M-Series மற்றும் F-Series மாடல்களுக்கு எப்போது வரும்?

அதாவது மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, உங்களிடம் வேறு சாம்சங் போன்கள் இருந்தால். அதாவது கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன் அல்லது கேலக்ஸி எஃப்-சீரிஸ் ஸ்மார்ட்போன் இருந்தால்..

..ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வழியாக அணுக கிடைக்கும் அம்சங்களையும் செயல்பாடுகளையும் பெற நீங்கள் 2023 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
11 Samsung Smartphones To Get Android 13 OS Update Within This Year 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X