விவோ விவோ V11 புரோ.! சிறந்த ஸ்மார்ட் போன் என்பதற்கான 11 காரணங்கள்.!
விவோ நிறுவனம் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு, தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்திய ஸ்மார்ட் போன் சந்தியில் நிறுவி இருக்கிறது.
விவோ நிறுவனம் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு, தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்திய ஸ்மார்ட் போன் சந்தியில் நிறுவி இருக்கிறது. விவோ நிறுவனம் குறித்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன் தயாரிப்புகளை இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தந்து அடுத்த சூப்பர் பியூட்டரிஸ்டிக் ஸ்மார்ட்போன்னாக விவோ விவோ V11 புரோ ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது.

விவோ சமீபத்தில் இந்திய சந்தையில் தனது பியூட்டரிஸ்டிக் விவோ V11 புரோ ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டது, இதன் விலை மற்ற முன்னணி நிறுவங்களை விட மிக குறைவான விலையில் விற்பனனி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விவோ V11 புரோ ஸ்மார்ட்போன் வெறும் ரூ 25,990 க்கு இந்தியா சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. முந்தைய விவோ ஸ்மார்ட்போன்கள் போல அல்லாமல், விவோ V11 ப்ரோ ட்ராப் நாட்ச் டிஸ்பிளே மற்றும் புரட்சிகர தொழில்நுட்பங்களின் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது.

விவோ விவோ V11 புரோ சிறந்த ஸ்மார்ட் போன் என்பதற்கான 11 காரணங்கள்:
இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பம்:
இந்த புதிய விவோ V11 புரோ ஸ்மார்ட் போன் இல் 4 ஆம் ஜெனெரேஷன் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய 4 ஆம் ஜெனெரேஷன் சென்சார்கள் 50% அதிக துல்லியமாகவும் சிறப்பாகவும் செயல்படும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற முன்னணி ஸ்மார்ட் போன்களில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்கேனர் போல இல்லாமல், மிக வேகமா காய் ரேகைகளை உணர்கிறது. பட்ஜெட் விலையில் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் முதல் அதிநவீன ஸ்மார்ட் போன் விவோ V11 புரோ மட்டும் தான்.

விவோவின் ஸ்லீக் & கூல் கலர் ஸ்மார்ட் போன்:
விவோ V11 புரோ ஸ்மார்ட் போன் கலைநயத்தின் உன்மையானா சிறந்த வடிமைப்பு என்று தான் சொல்ல வேண்டும். புதிய விவோ V11 புரோ 1.76mm அளவில் ஒரு சிறிய மெலிதான கொடு போன்று மிகவும் கவனத்துடனும் நேர்த்தியுடனும் அதிநவீன தொழில்நுட்ப முறைப் படி சிறப்பாகவும் ஸ்லீக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவோ V11 புரோ இன் பின் பக்க 3டி கவர் பேனல் இரண்டு விதமான வண்ணக் கலவையுடன் இணைத்து விவோ ஸ்மார்ட் போன்ற்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கிறது. இந்த விவோ V11 புரோ ஸ்டார்ரி நைட் மற்றும் டேஸ்ழிங் கோல்ட் என்று இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

கிரிஸ்பி ஹாலோ முழு எச்.டி டிஸ்பிளே:
விவோ V11 புரோ ஸ்மார்ட் போன் 6.4' இன்ச் முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே உடன் கூடிய 1.76 பேசில் மற்றும் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய 19:5:9 விகித சூப்பர் கிரிஸ்பி ஹாலோ திரையுடன் வருகிறது. பட்ஜெட் விலையில் சிறிய நாட்ச் உடன் இந்தியா சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரே ஸ்மார்ட் போன் விவோ V11 புரோ மட்டுமே.

முன்பக்க ஏ.ஐ ஸ்மார்ட் செல்பி கேமரா:
சிறந்த செல்பி அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்குவதற்காக விவோ V11 புரோ ஸ்மார்ட் போன் இல் 25 மெகா பிக்சல் சூப்பர்-ஹை- ரெசொலூஷன் சென்சார் உடன் கூடிய முன்பக்க செல்பி கேமராவுடன் களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட் போன் இல் ஏ.ஐ ஸ்மார்ட் பேஸ் ஷேப்பர் என்னும் புதிய சேவை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் பிக்சல் ரியர் கேமரா:
விவோ V11 புரோ ஸ்மார்ட் போன் 12 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமராவுடன் வருகிறது. புதிய ஸ்மார்ட் போன் லோ லைட் இடத்திலும் சிறந்து செயல்படும் பிரத்தியேக சென்சார்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப் டிராகன் 660 ஏ.ஐ.இ ப்ராசஸர்:
விவோ V11 புரோ அட்டகாசமான குவால்காம் ஸ்னாப் டிராகன் 660 ஏ.ஐ.இ ப்ராசஸர் உடன் களமிறங்கி பட்ஜெட் விலையில் சிறந்த ஆற்றல் சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. விவோ V11 புரோ ஸ்மார்ட் போன் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் வருகிறது.
உள்ளுணர்வு ஃபன்டச் ஓ.எஸ். 4.5:
புதிய ஃபன்டச் ஓ.எஸ். 4.5 இணக்கத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது விவோ V11 புரோ ஸ்மார்ட் போன். ஜோவி ஏ.ஐ என்ஜின் மூலம் சிறந்த மெமரி சேவை மற்றும் ஆற்றல் சேவை வழங்கப்பட்டிருக்கிறது. புதிய V11 புரோ எந்த தடையும் இன்றி மல்டி டாஸ்கிங் சேவையை வழங்குகிறது.

டூயல் என்ஜின் பாஸ்ட் சார்ஜிங்:
விவோ V11 புரோ ஸ்மார்ட் போன் 3400எம்.ஏ.எச் பேட்டரி இணக்கத்துடன் கூடிய டூயல் என்ஜின் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இத்துடன் கூடுதலாக ஒன்பது அடுக்கு பாதுகாப்பு தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 20 நிமிடத்தில் முழுமையாக உங்களின் ஸ்மார்ட் போன்னினை சார்ஜ் செய்கிறது.
இன்னபிறரெட் பேஸ் அன்லாக் :
இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதியுடன் வரும் விவோ V11 புரோ ஸ்மார்ட் போன், கூடுதல் பாதுகாப்பிற்காக இன்னொரு அட்டகாசமான பாதுகாப்பு சேவையைப் பயனர்களுக்கு பட்ஜெட் விலையில் வழங்கியிருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்வென்றால் இருட்டிலும் உங்களின் முகத்தை அடையாளம் காணும் பிரத்தியேக இன்னபிறரெட் சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ஏ.ஐ கேம் மோடு:
விவோ V11 புரோ ஸ்மார்ட் போன் இன் இன்னொரு சிறந்த சிறப்பம்சம் அதன் ஏ.ஐ கேம் மோடு தான். கேமிங் மோடில் இருக்கும் பொழுது உங்களுக்கு வரும் அழைப்புகளை நிராகரித்து தடை இல்லா விளையாட்டு அனுபவத்தை வழங்குகிறது.
ஜோவி அசிஸ்டன்ட்:
விவோ நிறுவனம் தனது புதிய தயாரிப்புகள் அனைத்திலும் ஜோவி ஏ.ஐ சேவையை இணைத்துள்ளது. நீங்கள் உங்களின் விவோ V11 புரோ ஸ்மார்ட் போன்னினை பயன்படுத்த துவங்கிய பின், உங்களின் தேவைகளை நன்கு உணர்ந்து உங்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.


Click it and Unblock the Notifications