பிலிப்ஸ் செனியும் எக்ஸ்806 மற்றும் வின்காம் டபுள்யு702 - ஒரு ஒப்பீடு

பிலிப்ஸ் செனியும் எக்ஸ்806 இரட்டை சிம் கொண்டு பல நினைத்துப் பார்க்க முடியாத பல ஏராளமான வசதிகளை வாரி வழங்குகின்றது. அதே நேரத்தில் வின்காம் டபுள்யு702 தொடுதிரையுடன் கூடிய இரட்டை சிம் கொண்டு அட்டகாசமான வசதிகளை வழங்குகின்றது. பொதுவாக பார்த்தால் 2 மொபைல்களுமே போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களைக் கவர பல சிறந்த வசதிகளை வழங்குகிறது எனலாம்.
பிலிப்ஸ் செனியும் எக்ஸ்806 டிஎப்டி தொடுதிரையுடன் 256 வண்ண அடர்த்தியை சப்போர்ட் செய்கிறது. இதன் பிக்ஸ்ல ரிசலூசன் 240 X 400 ஆகும். மேலும் இதில் கையெழுத்து அறியும வசதியும் உள்ளது. வின்காம் டபுள்யு702ன் டிஸ்ப்ளே 7.1 செமீ. ஆகும்.
பிலிப்ஸ் 47 எம்பி இன்டர்னல் சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. இதன் மெமரியை 8 ஜிபி வரை அப்க்ரேட் செய்ய முடியும். ஆனால் இதில் 3ஜி சப்போர்ட் இல்லை. வின்காமைப் பார்த்தால் அதன் டிபால்ட் மெமரி குறைவாகும். ஆனால் அதை 16ஜிபி வரை விரிவுபடுத்தலாம். மேலும் தகவல் பரிமாற்றத்திற்கான ப்ளூடூத்தும் இதில் சிறப்பாக உள்ளது.
பிலிப்ஸின் கேமாரவைப் பார்த்தால் அது 5எம்பியுடன் 2560 X 1920 பிக்ஸல் சப்போர்ட்டைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஆட்டோ போக்கஸ், எல்இடி ப்ளாஷ், முக குறைப்பு மற்றும் சிவப்பு கண்ணைக் குறைத்தல் போன்ற வசதிகள் ஏராளம். ஆனால் வின்காம்மில் உள்ள கேமரா 2 மேகா பிக்ஸல் ஆகும். மொபைல் ட்ராக்கர் வசதி உள்ளதால் இந்த மொபைல் காணாமல் போனாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
பிலிப்ஸ் செனியும் எக்ஸ்806 மற்ற புற ஹார்வேர் டிவைஸ்களோடு மினி யுஎஸ்பி வி2.0 போர்ட் மூலம எளிதாக ஸின்க்ரோனைஸ் செய்ய முடியும். இரண்டு மொபைல்களுமே நெட்வோர் மற்றும் இண்டர்நெட் வசதிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
குறிப்பாக வின்காம் டபுள்யு702 குறுஞ்செய்தி வசதியுடன் பேஸ்புக், ஸ்கைப் உறையாடல் போன்ற சோஷியல் நெட்வோர்க் வசதிகளை அளிக்கிறது. இந்த இரண்டு மொபைல்களின் விலை இன்னும் தெரியவில்லை என்றாலும் மலிவு விலையில் வரும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications