Home
Mobile

ஆர்டர் வேட்டை.. ரூ.6,967 பட்ஜெட்ல டைனாமிக் போர்ட் டிஸ்பிளே.. 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

டபுள் டிடிஎஸ் ஸ்பீக்கர்கள், 90Hz டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், லெதர் பேக் கொண்ட டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) போனானது, இதுவரையில் கிடைக்காத பட்ஜெட்டில் வருகிறது.

இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.7,599 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்தது. ஆனால், இப்போது அமேசான் (Amazon) தளத்தில் கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.6000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவொரு லிமிடெட் டீல் சலுகையாகும். இந்த போனின் பீச்சர்களை இப்போது பார்ப்போம்.

ஆர்டர் வேட்டை.. ரூ.6967 பட்ஜெட்ல டைனாமிக் போர்ட் டிஸ்பிளே.. எந்த போன்?

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 அம்சங்கள் (Tecno Spark Go 2024 Specifications): இந்த டெக்னோவில் ஹைய்ஓஎஸ் 13 (HiOS 13) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் T606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வருகிறது. மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆர்ம் ஜி57 ஜிபியு (ARM G57 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

இந்த டெக்னோவில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) வருகிறது. பாண்டா ஸ்கிரீன் புரொடெக்சன் (Panda Screen Protection) கொண்ட 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட டாட்-இன் டிஸ்பிளே (Dot-In Display) மாடலாகும்.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் டைனாமிக் போர்ட் பீச்சர் (Dynamic Port Feature) வருகிறது. பேஸ் அன்லாக், சார்ஜிங் இன்டிகேஷன் மற்றும் காலிங் அனிமேஷன் ஆகியவற்றின் நோட்டிபிகேஷன்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் 3 வேரியண்ட்கள் வருகின்றன.

ஆர்டர் வேட்டை.. ரூ.6967 பட்ஜெட்ல டைனாமிக் போர்ட் டிஸ்பிளே.. எந்த போன்?

ஆகவே, 6 ஜிபி ரேம் (3 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

மேலும், மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. இந்த டெக்னோவில் 13 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் எச்டிஆர் போட்டோகிராபி (HDR Photography), ஃபுல்எச்டி (FHD) ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

அதேபோல ஏஐ பியூட்டி மோட் (AI Beauty Mode) கொண்ட 8 எம்பி செல்பீ வருகிறது. ஆகவே, கேமராவில் மீடியம் அவுட்புட் மட்டுமே எதிர்பார்க்கலாம். டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audi Jack) வருகிறது.

அதேபோல சைடு பேஸ்ட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Faced Fingerprint Sensor) வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மிஸ்டரி ஒயிட், கிராவிட்டி பிளாக், அல்பென்கிளோவ் கோல்டு மற்றும் மேஜிக் ஸ்கின் கிரீன் ஆகிய கலர்கள் கிடைக்கிறது.

இந்த டெக்னோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியின் விலை ரூ.7,599ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.200 கூப்பன் டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,967 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
11 Percent Discount on TECNO Spark Go 2024 With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X