Home
Mobile

யாரு சாமி அவன்.. டிஸ்கவுண்ட்டில் 3D டிஸ்பிளே.. 6200mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50MP டெலிபோட்டோ.. எந்த மாடல்?

1.5K ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 90W ஹைப்பர் சார்ஜிங் கொண்ட 6200mAh பேட்டரி, லைட் ஃப்யூஷன் சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் வேகன் லெதர் பேனல் கொடுக்கும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) போனுக்கு மிரட்டலான டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த ரெட்மி ப்ரோ மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் முழு பீச்சர்களின் விவரங்கள் இதோ.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 14 Pro Plus Specifications): இந்த ரெட்மியானது மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் 3 எஸ்ஓசி (4nm Octa Core Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் மற்றும் வழக்கமான அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

யாரு சாமி அவன்.. டிஸ்கவுண்ட்டில் 3D டிஸ்பிளே.. 6200mAh பேட்டரி போன்!

3 வருட அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஹைப்பர் ஓஎஸ் (Hyper OS) கொடுக்கிறது. இந்த ஹைப்பர் ஓஎஸ் மூலம் ஏஐ சப்டைட்டில், ஏஐ லைவ் இன்டர்பிரேட்ர், ஏஐ டிரான்ஸ்லேஷன் மற்றும் இன்-பில்ட் ஜெமினி சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், இந்த ரெட்மி நோட்14 ப்ரோ பிளஸ் போனின் கேமராவிலும் ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன.

ஆகவே, ஏஐ ஸ்மார்ட் கிளிப், சர்க்கிள் டூ சர்ச்ச், ஏஐ இமேஜ் எக்ஸ்பான்ஷன், ஏஐ எரைஸ் ப்ரோ, ஏஐ கட்அவுட் போன்ற பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். லைட் ஃப்யூஷன் 800 (Light Fusion 800) சென்சார் மற்றும் ஹைப்பர்ஓஸ் (HyperOS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 50 எம்பி டெலிபோட்டோ மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு உள்ளது.

இந்த கேமராவில் 2.5X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போனில் 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது. டிஸ்பிளேவில் பிரீமியம் பீச்சர்கள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) மற்றும் 3டி கர்வ்ட் டிசைன் (3D Curved Design) கிடைக்கிறது.

1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெப்ஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (2712 × 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளது.

டிஸ்பிளே, சிப்செட் பீச்சர்களை போலவே பேட்டரி பீச்சர்களும் பிரீமியமாக இருக்கின்றன. ஆகவே, 90W ஹைப்பர் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6200mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு லோவ் டெப்ம்ரேச்சர் சார்ஜிங், வோல்டேஜ் பூஸ்டர் சிப், அவுட்டோர் சார்ஜிங் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. டைட்டன் பிளாக், பாண்டம் பர்பிள் மற்றும் ஸ்பெக்டர் ப்ளூ கலர்கள் இருக்கிறது.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் பிளிப்கார்ட் (Redmi Note 14 Pro Plus Flipkart): இந்த ரெட்மியின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.29,999 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்யலாம். எச்டிஎப்சி, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் வருகிறது.

Best Mobiles in India

English summary
11 Percent Discount on Redmi Note 14 Pro Plus 5G in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X