பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல SONY கேமரா.. 16GB ரேம்.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
போகோ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டிருந்த போகோ எப்6 5ஜி (POCO F6 5G) மாடலானது, டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துவிட்டது. சோனி ஐஎம்எக்ஸ் சென்சாருடன் ரியர் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி சென்சாருடன் செல்பீ கேமரா மட்டுமல்லாமல் 90W சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த போகோவின் விலை, முழு பீச்சர்கள் இதோ.
போகோ எப்6 5ஜி விலை (POCO F6 5G Price): இந்த போக்கோவில் 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,999ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.31,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும் இருக்கிறது.

இந்த விலையில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு பயன்படுத்தி பெறலாம். அதேபோல ரூ.2000 எக்ஸ்சேஞ் போனஸ் மற்றும் 12 மாதங்களுக்கு நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும் 1 + 1 வாரண்டி கிடைககிறது. ஆகவே, கூடுதலாக 1 வருட வாரண்டியை பெற்று கொள்ளலாம்.
இந்த போகோ எப்6 5ஜி போனை பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளாக் (Black) மற்றும் டைட்டானியம் (Titanium) கலர்களில் ஆகிய 2 கலர்களில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 ஆரம்ப விலையில் இந்த போகோ கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு அந்த போனில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன.

போகோ எப்6 5ஜி அம்சங்கள் (POCO F6 5G Specifications): இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.
மேலும், 1.5K ரெசொலூஷன், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் மற்றும் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது.
IP64 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த போக்கோவில் சோனி ஐஎம்எக்ஸ் 822 (Sony IMX-822) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும்.
மெயின் கேமராவை போலவே 20 எம்பி செல்பீ ஷூட்டரும் ஓம்னிவிஷன் ஓவி20பி (OmniVision OV20B) சென்சார் கொண்டிருக்கிறது. இந்த ஷூட்டரில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications








