Home
Mobile

ஆர்டர் அள்ளுமே.. 50எம்பி கேமரா.. pOLED டிஸ்பிளே.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் (Motorola Edge 60 FUSION) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் மாடலுக்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அள்ளுமே.. ஆஃபரில் மோட்டோரோலா  5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் அம்சங்கள் (Motorola Edge 60 FUSION Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மமீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம்(Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் வெளிவந்தது மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 2712 x 1220 பிக்சல்கள், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகிய ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பின்பு MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்.

குறிப்பாக டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் யூ.எஸ்.பி-சி ஆடியோ, ஹைப்ரிட் டூயல் சிம், 5 ஜி, வைஃபை 6, புளூடூத் 5.4 , என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
11 Percent Discount on motorola edge 60 fusion 5G in Flipkart sale check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X