யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 68W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட் பட்ஜெட்டில், கேமிங் பிரியர்களுக்கான 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கும் பிஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு, லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வேகன் லெதர் பேனல் டிசைனில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மோட்டோவின் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ.22,999 ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதேபோல ஈஎம்ஐ சலுகைகளும் கிடைக்கின்றன.

ஆகவே, மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனை எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.2,250 டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதேபோல ஐடிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.2,500 டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, ரூ.20000 பட்ஜெட்டில் இந்த மோட்டோவை வாங்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 7s Gen 2) சிப்செட் பர்ஃபாமென்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) யுஐ இந்த மோட்டோவில் கிடைக்கிறது. 6.7 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
மிட்-பிரீமியம் போன்களில் கிடைக்கும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) டிஸ்பிளே பாதுகாப்பை கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். மேலும், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. கேமிங் பிரியர்களுக்கு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
இந்த ஃப்யூசனில் 50 எம்பி ரியர் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ரியர் கேமராவில் வீடியோக்களுக்கான ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாரை கொடுக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது.
68W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும் 5000mAh பேட்டரி வருகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே வந்திருந்தும், பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எட்ஜ் 50 ஃப்யூசனில் மார்ஷ்மெல்லோ ப்ளூ (Marshmallow Blue), ஃபாரஸ்ட் ப்ளூ (Forest Blue), ஹாட் பிங்க் (Hot Pink) மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
லெதர் பேனலில் பிரீமியம் லுக், சிப்செட்டில் பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ், டிஸ்பிளேவில் குவாலிட்டி மற்றும் கேமிங் அவுட்புட் போன்ற அனைத்தையும் கொடுக்கும் ஸ்மார்ட்போன் பட்ஜெட்டிலும் அதே நேரத்தில் பக்கா டிஸ்கவுண்ட்டிலும் வேண்டுமானால், இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனை ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








