Home
Mobile

மிரளவிட வந்துட்டாப்ல.. ரூ.20999 போதும்.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. QUAD பிக்சல்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் மிரளும் பட்ஜெட்டில் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி கேமரா, கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், 68W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், வேகன் பேனல் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) விற்பனைக்கு வந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): இந்த மோட்டோவில் 6.7 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்பிளே (Endless Edge Display) வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மாடலாகும்.

மிரளவிட வந்துட்டாப்ல.. ரூ.20999 போதும்.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா!

இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection), எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் மிட்-பிரீமியம் கேமரா பீச்சர்கள் வருகின்றன.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + மேக்ரோ ஆப்ஷனுடன் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700சி சென்சார் (Sony LYT 700C Sensor) மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) வருகிறது.

அதேபோல ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus), அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) மற்றும் அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அரிசோன் லாக் (Horizon Lock), ஆடியோ ஜூம் (Audio Zoom) மற்றும் வீடியோ ஸ்னாப்ஷாட் (Video Snapshot) சாப்ட்வேர் வருகிறது.

மிரளவிட வந்துட்டாப்ல.. ரூ.20999 போதும்.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா!

மேலும், வழக்கமான டூயல் கேப்ச்சர் (Dual Capture), அல்ட்ரா-ரெஸ் (Ultra-Res), நைட் விஷன் (Night Vision) மற்றும் டில்ட் ஷிப்ட் (Tilt-Shift) போன்ற போட்டோகிராபி பீச்சர்கள் வருகின்றன. அதேபோல குவாட் பிக்சல் டெக்னாலஜி, ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், பேஸ் ரீடச் போன்ற பீச்சர்களுடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) மொபைல் சிப்செட் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது. கேமரா, டிஸ்பிளேவை போலவே பேட்டரி சிஸ்டமும் பட்டையை கிளப்பும்படி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடலில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

மேலும், டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் IP68 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஹாட் பிங்க் மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ கலர்களில் வேகன் பேனல் மாடல் கிடைக்கிறது.

அதேபோல ஃபாரஸ்ட் ப்ளூ கலரிலும் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கிவிட்டது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இப்போது, ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி போனை வெறும் ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், 5000mAh போன்ற பீச்சர்களுடன் பிரீமியம் வேகன் பேக் பேனல் கொண்ட மாடல் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
11 Percent Discount on Motorola Edge 50 Fusion With 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X