SALE பிச்சிக்குது.. ரூ.14,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கொண்ட 64 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ஏற்கனவே அடிமட்ட விலைக்கு கிடைத்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) போனுக்கு கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதனால் லாவா பிரியர்கள் மட்டுமல்லாமல் மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களும் அடிச்சு புடிச்சு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் எப்படி?
லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Lava Blaze X 5G Specifications): இந்த லாவா போனில் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளேவானது ஓரிரு மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது.

இதில் லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி முன்னணியில் இருக்கிறது. இந்த டிஸ்பிளே மட்டும் பட்ஜெட்டிலும் பட்டையை கிளப்புகிறதா என்றால், அதுதான் இல்லை. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி போனின் கேமரா பீச்சர்களும் பட்ஜெட்டைவிட கூடுதலாக அவுட்புட் கொடுக்கும்படி இருக்கின்றன. 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் கிடைக்கிறது.
மெயின் கேமராவில் சோனி (SONY) சென்சார் கிடைக்கிறது. ஸ்கிரீன் ஃபிளாஷ் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்திய கேமரா பிரியர்கள் விரும்பும் டூயல் வியூ வீடியோ (Dual View Video), ப்ரோ வீடியோ (Pro Video), நைட் மோட் (Night Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. எச்டி வீடியோ ஷூட் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த லாவா போனில் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி கேபிள் (Type-C Cable) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 0-100 சார்ஜ் செய்ய 110 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 480 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்பை பேக்கப் கிடைக்கும். இந்த 5000mAh பேட்டரியுடன் 8.45 எம்எம் தடிமன் கிடைக்கிறது. மொத்தமாக 183 கிராம் எடை வருகிறது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் + ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டிலும் லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கொடுக்கிறது. மேட் பினிஷிங் பேனலுடன் ஸ்டார்லிட் பர்பிள் (Starlight Purple), டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் மூன்ஸ்டோன் ப்ளூ (Moonstone Blue) ஆகிய கலர்கள் வருகிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த கம்மி பட்ஜெட்டிலும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.15,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications