பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.22,000-க்கு வந்த 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 66W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) மிரளும் தள்ளுபடியில் 3டி டிஸ்பிளே, 16ஜிபி ரேம், ஆரா லைட், 64எம்பி கேமரா, 66W சார்ஜிங், 4600mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொண்ட ஐக்யூ இசட் 7 ப்ரோ (iQOO Z7 Pro) போன் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன்களின் வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் கர்வ்ட் டிஸ்பிளே போன்கள் மீது பலருக்கு தனிப்பட்ட மோகம் இருக்கும். டிஸ்பிளே மட்டுமல்லாமல், கர்வ்ட் போன்களில் டிசைனும் மிரளவிடும்படி இருக்கும். அப்படி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் ஐக்யூ இசட்7 ப்ரோ மாடலின் டிசைனானது, தட்டித் தூக்கியது.

இந்த போனில் டிசைன் மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கேமரா சிஸ்டங்களிலும் மிட்-ரேஞ்ச் பீச்சர்களை பட்ஜெட்டில் வருகின்றன. அதோடு விற்பனையில் சக்கைப்போடு போட்டுள்ளது. அப்படியென்ன இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனில் இருக்கிறது என்பதை முதலில் பார்த்து விடுவோம்.
இந்த போனில் சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி உள்ளது. ஆரா லைட் (Aura light) சப்போர்ட் கொண்ட சூப்பர் நைட் மோட் (Super Night Mode) வருகிறது.
அதேபோல ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode) மற்றும் ஹைபிரிட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Hybrid Image Stabilization) கேமரா பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு நல்ல அவுட்புட் கொடுக்கும். டூயல் வியூ வீடியோ (Dual-View Video), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.

டிஸ்பிளே அம்சங்களை பார்க்கையில், 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும். எச்டிஆர்10+ ( HDR10+) மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. மிட்-ரேஞ்ச் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் 5ஜி (Octa Core MediaTek Dimensity 7200 4nm 5G) சிப்செட் மற்றும் மாலி - ஜி610 ஜிபியு (Mali - G610 GPU) கிராபிக்ஸ் வருகிறது. ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே இருக்கிறது. அதேபோல பேட்டரி பீச்சர்களை பார்க்கையில், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4600mAh பேட்டரி கொண்டிருக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் வருகிறது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.36 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது.
அதேபோல 175 கிராம் எடையில் லைட்-வெயிட் பாடி கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. ப்ளூ லாகூன் (Blue Lagoon) மற்றும் கிராபைட் மேட் (Graphite Matte) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.23,981ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.25,036ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.1,500 உடனடி தள்ளுபடியில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, ரூ.22,481 ஆரம்ப விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








