Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.10,300 ரேட் கட் ஆப்பிள்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. A18 சிப்செட்.. எந்த மாடல்?

ஓஎல்இடி டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, ஏ18 சிப்செட், IP68 ரேட்டிங், கியூஐ சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் மிட்-பிரீமியம் மாடலாக வெளியாகிய ஐபோன் 16இ (iPhone 16e) போனுக்கு ஒரே நேரத்தில் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் மார்கெட் விலையில் இருந்து ரூ.10,300 கம்மியாக வாங்கி கொள்ளலாம். இந்த ஐபோன் 16இ போனுக்கு கிடைக்கும் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். அப்படியே பீச்சர்களையும் பார்க்கலாம்.

ஐபோன் 16இ அமேசான் விற்பனை (iPhone 16e Amazon Sale): இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இந்த போனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,900ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்யட்டின் விலை ரூ.89,900ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான தளத்தில் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது ரூ.53,600 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.10,300 ரேட் கட் ஆப்பிள்.. OLED டிஸ்பிளே!

அதேபோல 512 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது ரூ.84,100 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, 128 ஜிபி மாடலுக்கு ரூ.6,300 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு போக ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.4,000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினாலும், இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஆகவே, விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் என்று மொத்தமாக ரூ.10,300 விலை கம்மியாக 128 ஜிபி ரேம் மாடல் கிடைக்கிறது. அதே நேரத்தில் 512 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.5,800 விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.4,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,800 விலை குறைப்பில் இந்த மாடலை வாங்கி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக ரூ.73,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ஐபோன் 16இ போனை பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence), ஏ18 சிப்செட் கிடைப்பதால், இந்த ஐபோன் 16இ போனுக்கு தனி மார்கெட் இருக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.10,300 ரேட் கட் ஆப்பிள்.. OLED டிஸ்பிளே!

ஐபோன் 16இ அம்சங்கள் (iPhone 16e Specifications): இந்த ஐபோனில் 6.1 இன்ச் (2532 x 1170 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஓஎல்இடி (OLED) பேனல் டிஸ்பிளேவுக்கு செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் மட்டுமல்லாமல், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர் (HDR) மற்றும் ட்ரூ டோன் (True Tone) போன்ற பீச்சர்கள் உள்ளன.

இந்த செராமிக் ஷீல்டு புரொடெக்சன் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாடிக்கு IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 16இ மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமரா கிடைக்கிறது.

இது சிங்கிள் ரியர் கேமராவாக இருப்பதால், வைடு-ஆங்கிள் (Wide-angle) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல ஆப்பிள் போன்களில் வழக்கமாக கிடைக்கும் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), 4K ரெசொலூஷன் (டால்பி விஷன்) ரெக்கார்டிங் மற்றும் சினிமாடிக் மோட் (Cinematic Mode) கிடைக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
11 Percent Discount on iPhone 16e With 48MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X