Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.33,199 போதும்.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 4385mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு சோனி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, டைட்டன் சிப், 4385mAh பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பக்கா அம்சங்களை கொண்ட கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) போனுக்கு மிரளவிடும் தள்ளுபடி கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 7ஏ அம்சங்கள் (Google Pixel 7a Specifications): இந்த பிக்சல் போனில் 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்டுள்ளது.

ரூ.33,199 போதும்.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 4385mAh பேட்டரி போன்!

இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர் (HDR) சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட கூகுள் டென்சர் ஜி2 (Google Tensor G2) சிப்செட் வருகிறது. அதோடு டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த கூகுள் பிக்சல் 7ஏ போனில் நானோ (Nano) மற்றும் ஈசிம் (eSIM) சப்போர்ட் வருகிறது. குவாட் பிடி குவாட் பேயர் (Quad PD Quad Bayer) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா கொண்டிருக்கிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்787 (Sony IMX787) சென்சார் கொண்ட அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS), பிடிஏஃஎப் (PDAF) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல 13 எம்பி செல்பீ கேமராவானது, 95 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் (Ultra-wide Lens) கொண்டிருக்கிறது. இந்த செல்பீ கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.33,199 போதும்.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 4385mAh பேட்டரி போன்!

இந்த கூகுள் பிக்சல் 7ஏ மாடலில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistant) வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், 2 மைக்ரோபோன்கள் (Microphones) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பிக்சல் போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4385mAh பேட்டரி வருகிறது. அதோடு வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ/என்ஏ (5G SA/NA) மற்றும் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) சப்போர்ட் வருகிறது.

அதோடு வை-பை 6ஈ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டிகள் வருகின்றன. இந்த போனில் சார்கோல் (Charcoal), சீ (Sea) ஸ்னோவ் (Snow) மற்றும் கோரல் (Coral) ஆகிய 4 கலர்கள் இருக்கின்றன. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.36,099ஆக இருக்கிறது.

இருப்பினும், பிளிப்கார்ட் காதலர் தின விற்பனையை (Flipkart Valentines Days Sale) முன்னிட்டு ரூ.2,900 தள்ளுபடியோடு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியை பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த கூகுள் பிக்சல் 7ஏ போனை வெறும் ரூ.33,199 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
11 Percent Discount on Google Pixel 7a in Flipkart Valentines Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X