மொத்தம் 2 ஆபர்.. அதுல 1 யூஸ் பண்ணா கூட லாபம் தான்.. iPhone 15 மீது அடேங்கப்பா ஆஃபர்!
நீங்களொரு ஆப்பிள் ரசிகராக இருந்தால்.. இந்நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரீஸ் மாடல்களில் பணியாற்றி வருகிறது என்பதையும், இந்த சீரீஸ் வருகிற 2024 செப்டம்பர் மாத வாக்கில், உலகளவில் அறிமுகமாகும் என்பதையும் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால்.. ஐபோன் 16-ல் என்னென்ன மேம்பாடுகளை, மாற்றங்களை எதிர்பார்க்காலம்? அதற்கு பின்னர் வரும் ஐபோன் 17 சீரிஸில் என்ன எதிர்பார்க்கலாம்? கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 15 சீரீஸ் மீது திடீர் திடீரெனெ கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? இதைப்பற்றி எல்லாம் தாங்கவே தெரிந்துகொள்ள முடியாது. இந்த இடத்தில் தான் நாங்கள் உங்களுக்கு உதுவுவோம்.

முதலில் ஐபோன் 15 மீது கிடைக்கும் திடீர் ஆபர் பற்றி பார்த்துவிடலாம்! கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வொண்டர்லஸ்ட் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 மாடலானது தற்போது ரூ.68,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் வெளியீட்டு விழாவில், ஐபோன் 15 மாடலின் 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.79,900 க்கும், இதே மாடலின் 256ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.89,900 க்கும் அறிமுகமானது. ஐபோன் 15-ல் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டும் உள்ளது, அது ரூ.1,09,900 க்கு அறிமுகமானது.
ஆனால் தற்போது ஐபோன் 15-ன் பேஸிக் ஸ்டோரேஜி ஆனது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா வழியாக ரூ. 68,000 க்குள் வாங்க கிடக்கிறது. இந்த சலுகை விலையை பெற நீங்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கும் 2 வகையான சலுகைகளை பயன்படுத்த வேண்டி இருக்கும்.
முதல் சலுகை: அமேசான் வலைதளத்தில் ஐபோன் 15 மீது கிடைக்கும் நேரடி தள்ளுபடி. இதன்கீழ் ஆப்பிள் ஐபோன் 15 ,இது 11 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது கூடுதல் சலுகைகள் ஏதுமின்றி ஐபோன் 15 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.71,290 க்கு வாங்க கிடைக்கிறது.
இரண்டாவது சலுகை: அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கும் பேங்க் ஆபர். உங்களிடம் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு இருந்தால் ஐபோன் 15 மாடலின் விலையை இன்னும் குறைக்கலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் அமேசான் வழியாக ஐபோன் 15-ஐ வாங்கும் போது ரூ.4,000 உடனடி தள்ளுபடியை பெறலாம்.
ஒருவேளை நீங்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு (ICICI Credit Card) பயனராக இருந்தால் உங்களுக்கும் ரூ.4,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு (Amazon Pay ICICI Credit Card) பயனர்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகளின் வழியாகவும் ரூ.4,000 தள்ளுபடியை பெறலாம். இப்படியாக ஐபோன் 15 மாடலின் இறுதி ஆபர் விலையை ரூ.68,000 க்குள் கொண்டுவர முடியும்.
ஐபோன் 15-க்கு பதிலாக ஐபோன் 14-ஐ வாங்கலாமா? ஐபோன் 15 மாடலை வாங்குவதே நல்லது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 15 மாடலானது பஞ்ச்-ஹோல் டிசைனை பெற்றுள்ளது, இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவை பேக் செய்கிறது. கேமரா பிரிவில் குறிப்பிடத்தக்க அப்கிரேட் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் 48 மெகாபிக்சல் மெயின் ரியர் கேமராவானது 'ரிச்' ஆன மற்றும் 'ஷார்ப்' ஆன புகைப்படங்களை வழங்குகிறது.
மேலும் ஆப்பிள் ஐபோன் 14 உடன் ஒப்பிடும்போது ஐபோன் 15 மாடலின் பேட்டரியானது "சிறிய அளவிலான" மேம்பாட்டினை பெற்றுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, ஐபோன் 15 மாடலானது 2 நாட்கள் என்கிற பேட்டரி லைஃப்பை வழங்கும். ஆனால் உண்மையில் இது, சராசரி பயன்பாட்டின் கீழ் இது ஒரு நாளுக்கும் குறைவான பேட்டரி லைஃப்பையே வழங்குகிறது.
ஐபோன் 14 மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.06-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட் (Apple A15 Bionic Chipset) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
ஐபோன் 16 மற்றும் ஐபோன் 17 சீரிஸ் பற்றிய அப்டேட்: ஐபோன் 16 சீரிஸில் இடம்பெறும் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடலுக்கு பின்னர் ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus) மாடல் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஐபோன் 17 ஸ்லிம் (iPhone 17 Slim) மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
மேலும் ஐபோன் 17 ஸ்லிம் மாடல் தான் சீரிஸின் மிகவும் விலையுயர்ந்த மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 16 சீரீஸை பொறுத்தவரை, இதன் ரியர் கேமரா செட்டப் ஆனது மேல்-இடது மூலையில் இருந்து ஐபோனின் பேக் பேனலின் நடுப்பகுதிக்கு கொண்டு வரப்படலாம். டிஸ்பிளே அளவை பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் ஐபோன் 6.12 இன்ச்சிற்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆனது 6.69 இன்ச்சிற்கு இடையே குறையக்கூடும்.


Click it and Unblock the Notifications








