ரூ.3.12 லட்சத்தில் தங்கமுலாமுடன் டேக் ஹீயூவர் போன்!

இந்த நிலையில், ரூ.3.12 லட்சம் விலையில் லிங்க் என்ற புதிய ஸ்மார்ட்போனை டேக் ஹீயூவர் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆடம்பர கைக்கடிகார தயாரிப்பில் புகழ்பெற்ற இந்த நிறுவனம், மொபைல்போன் மார்க்கெட்டிலும் தனது ஆடம்பர அம்சங்களை பறைசாற்றியுள்ளது.
சாதாரணமாக ஸ்மார்ட்போன்களில் காணப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் கொண்டதாக இருந்தாலும், இந்த போனின் விலையை கேட்டால் தலைசுற்றல்தான் வருகிறது.
இருந்தாலும், இந்த போனுக்கு அதிக விலை நிர்ணயிக்க காரணம் இருக்கிறது. ஆம், இந்த போனின் கேஸ்கள் எனப்படும் பேனல்கள் 18 கேரட் தங்கமுலாம் பூச்சு மற்றும் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு வருவதால்தான் இந்த கொள்ளை விலை.
தங்கம் தவிர, தாங்கள் வைத்திருக்கும் கார் மற்றும் சட்டை நிறத்துக்கு தக்கவாறு போனின் பேனலை மேட்சிங் மேட்சிங்காக மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. இதற்காக, டைட்டானியம், ஸ்டீல் மற்றும் லெதர் பேனல்கள் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ.
இந்தியர்களின் தனி நபர் வருவாய் அதிகரித்துள்ளதை கவனத்தில்கொண்டு, வெளிநாட்டு சந்தைகளில் மட்டும் பிரபலமான இந்த லிஙக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த டேக் ஹீயூவர் திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை பெரிதாக எதிர்பார்க்கவேண்டாம். ஸ்மார்ட்போன்களுக்கு உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. 3.5 டச் ஸ்கிரீன், ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த போன் இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது.
மல்டி பார்மெட் ஆடியோ பைல்களை இயக்கும் வசதி, வீடியோ பிளேயர், எப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 5 மெகாபிக்செல் கேமரா, வீடியோ ரெக்கார்டிங் வசதிகளும் உள்ளன.
யுஎஸ்பி பிசி சிங்க், புளூடூத், டபிள்யூலான் உள்ளிட்ட கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.
லிங்க் சிறப்பம்சங்கள்:
மாற்றிக்கொள்ளும் வசதி கொண்ட காஸ்ட்லியான பேனல்கள்
ஆன்ட்ராய்டு ஓஎஸ்
வை-பை மற்றும் புளூடூத்
8 ஜிபி சேமிப்பு திறன்
5 மெகாபிக்செல் கேமரா
6மணிநேரம் டாக்டைம் கொண்ட பேட்டரி
உள்ளிட்ட சிறப்பம்சங்களை டேக் ஹீயூவர் லிங்க் கொண்டுள்ளது.
விரைவில் இந்திய சந்தையில் அறி்முகமாக உள்ள இந்த போன் இந்திய மக்களிடம் 'லிங்க்' ஆகுமா?... பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications