Home
Mobile

எல்ஜி ரெவலியூஷன் vs சாம்சங் இன்பியூஸ் 4ஜி

By Super
எல்ஜி ரெவலியூஷன் vs சாம்சங் இன்பியூஸ் 4ஜி
அடுத்த தலைமுறைக்கான 4 ஜி போன்களின் வரவுகள் மார்க்கெட்டில் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் எல்ஜி நிறுவனத்தின் ரெவலியூஷன் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இன்பியூஸ் 4 ஜி தொழில்நுட்பம் கொண்ட போன்களின் ஒப்பீட்டை காணலாம்.

வடிவமைப்பில் இரண்டும் அசத்துகின்றன. இதில், எல்ஜி ரெவலியூஷனை விட சாம்சங் இன்பியூஸ் சற்று உயரமாகவும், ஸ்லிம்மாகவும் சற்று கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது. இன்பியூஸ் வெறும் 139 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. ஆனால், எல்ஜி ரெவலியூஷன் 172 கிராம் எடையுடன் வந்துள்ளது.

எல்ஜி ரெவலியூஷனில் 4.3 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையும், சாம்சங் இன்பியூஸ் 4.5 இஞ்ச் அமோலெட் தொடுதிரையும் கொண்டுள்ளன. இரண்டு போன்களும் 480*800 பிக்செல்களை கொண்டதாக இருக்கிறது.

இன்பியூசில் 8 மெகாபிக்செல் கேமராவும், ரெவலியூசனில் 5 மெகாபிக்செல் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டிலும் ஆட்டோபோகஸ், எல்இடி ப்ளாஷ் வசதி உள்ளன. தவரி, இரு போன்களிலும் வீடியோ காலிங் வசதிக்கான 1.3 மெகாபிக்செல் கொண்ட முகப்பு கேமராவை பெற்றுள்ளன.

தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில், இரண்டு போன்களும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகின்றன. ரெவலியூஷன் ஜிஞ்சர்பிரெட்டிலும், இன்பியூஸ் ப்ரேயோ வெர்ஷனையும் கொண்டுள்ளன. ரெவலியூஷனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் குயூவல்காம் ஸ்நாப் டிராகன் பிராசஸரும், இன்பியூசில் ஏஆர்எம் கார்டெக்ஸ் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளன.

இரண்டு போன்களும் 512 ரேமை பெற்றுள்ளன. மேலும், 16ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இந்த போன்களில் 32 ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதியும் உண்டு. இரண்டிலும் புளூடூத் 3.0 வெர்ஷன் கனெக்ட்டிவிட்டி வசதி கொண்டவை. தவிர, டபிள்யூலான், டிஎல்என்ஏ இணைப்பு வசதிகளும் உள்ளன.

மார்க்கெட்டில் ஸ்மார்ட்போன்கள் குவிந்துகிடப்பதால், தேர்வு செய்வதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை மட்டும் பார்க்காமல் அதன் விலையை பார்த்து தேர்வு செய்வதும் முக்கியம். அந்த வகையில் எல்ஜி ரெவலியூஷனை விட, சாம்சங் இன்பியூஸ் சிறந்ததாக தோன்றுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X