அப்படி என்னதான் இருக்கு இந்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில்... பார்க்கலாமாங்க !!

By Saravana Rajan
|

ஆப்பிள் கனவுடன் ஓடிக்கொண்டிருந்தவர்களை ஒன்பிளஸ் என்ற பெயர் திரும்பி பார்க்க வைத்தது. சரியான பட்ஜெட்டில் திறன் வாய்ந்த மொபைல்போன்களை வழங்கி ஒன்பிளஸ் பிராண்டு மொபைல்போன் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனமாக மாறி இருக்கிறது.

அசத்தலான ஸ்மார்ட்போன்

அசத்தலான ஸ்மார்ட்போன்

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு, கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஒன்பிளஸ் வரிசையில் தொடர்ந்து புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஆகிய மாடல்களின் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளன.

அதுக்கும் மேலே...

அதுக்கும் மேலே...

குறிப்பாக, ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடல் எதிர்பார்ப்புகளை விஞ்சிய மாடலாக வந்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ போன் குறித்த சிறப்பம்சங்களை டெக் உலகினர் அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து மேய்ந்துவிட்டனர். டிசைன், கேமரா, குயிக் சார்ஜர், பிராசஸர், பாப் அப் கேமரா உள்ளிட்ட வழக்கமான தகவல்களைவிட்டு இந்த மொபைலில் இருக்கும் சில சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களை பார்க்கலாம்.

அதிவேக திரை

அதிவேக திரை

ஒன்பிளஸ் 7 ப்ரோ மொபைல்போனில் அதி துல்லியம் வாய்ந்த 6.7 அங்குல புளூயிட் அமோலெட் தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, மொபைல்போனின் வேகத்திற்கு பிராசஸர் மற்றும் ரேம் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த ஒன்பிளஸ் 7 ப்ரோ போனில் 90 ஹெர்ட்ஸ் என்ற வேகத்தில் புதுப்பித்துக் கொள்ளும் இதன் திரை செயலிகளை இயக்கும்போது வேகத்தில் மிரட்டுகிறது.

சிறப்பு தொழில்நுட்பம்

சிறப்பு தொழில்நுட்பம்

இதன் திரை துல்லிய அளவு QHD+ மற்றும் FHD+ என இரண்டிற்கும் தானியங்கி முறையில் மாறிக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது தானியங்கி முறையில் திரை அமைப்பு மாறுவது இதன் முக்கிய சிறப்பம்சமாக உள்ளது. இதன்மூலமாக, பேட்டரியில் மின்திறன் விரயம் குறிப்பிடத்தக்க அளவு குறையும் வாய்ப்பை வழங்குகிறது.

அசர வைக்கும் ரேம்

அசர வைக்கும் ரேம்

ஒன்பிளஸ் 7 ப்ரோ மொபைல்போனில் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி மெமரி திறன் கொண்ட ரேம் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிவேகத்தில் இயங்கும் மொபைல்போன்களில் ஒன்றாக ஒன்பிளஸ் 7 ப்ரோ பெருமை பெறுகிறது. மேலும், இதுவரை வந்த ஒன்பிளஸ் போன்களில் 12ஜிபி என்ற அதிக மெமரி திறன் கொண்ட ரேம் ஒன்பிளஸ் 7 ப்ரோவில்தான் வழங்கப்பட்டுள்ளது.

ரேம் பூஸ்ட்

ரேம் பூஸ்ட்

இந்த போனில் ரேம் பூஸ்ட் என்ற வசதி அளிக்கப்படுகிறது. பல்முனை செயல்பாடுகளின்போது போனின் இயக்கம் திக்கு திணறாமல் இல்லாமல் செல்வதற்கு இது உதவும். மேலும், வீடியோ கேம் அப்ளிகேஷன்களை விரைவாக திறப்பதற்கும் உதவும். செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று சிஸ்டம் என்ற ஆப்ஷனில் ரேம் பூஸ்ட் தேர்வு செய்தால், செம்மையான இயக்குதல் அனுபவம் கியாரண்டி.

திறன்மிக்க பிராசஸர்

திறன்மிக்க பிராசஸர்

ஸ்மார்ட்போனின் செயல்திறனுக்கு அடிப்படையாக பிராசஸர் விளங்குகிறது. இந்த போனில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 12 ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ ஜிபியூ கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இணைந்து வீடியோ கேம் ஆடுவதில் புதிய பரவசத்தையும், உன்னத அனுபத்தையும் வழங்குகிறது. வீடியோ கேம் ஆடுபவர்களுக்கு நம்பர்-1 சாய்ஸாக இதனை கூறலாம்.

ஃபெனாடிக் மோடு வசதி

ஃபெனாடிக் மோடு வசதி

வீடியோ கேம் ஆடும்போது ஃபெனாடிக் மோடில் வைக்கும்போது, போன் அழைப்புகளை ஸ்பீக்கர் வழியாக பேசும் வசதியை அளிக்கிறது. மேலும், திரையின் பிரகாசத்தை தானியங்கி முறையில் கூட்டிக் குறைக்கும் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை அளிக்கிறது.

தனியுரிமை முக்கியத்துவம்

தனியுரிமை முக்கியத்துவம்

ஒன்பிளஸ் 7 ப்ரோ மொபைல்போனில் திரையிலேயே விரல்ரேகை சென்சார் மற்றும் முகத்தை வைத்து அடையாளம் கண்டு திறக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் விரைவாக இருப்பதும் சிறப்பு. செட்டிங்ஸில் சென்று ஆப் லாக்கர் மூலமாக குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் மட்டுமே திறக்கும் வகையில் மாறுதல் செய்ய முடியும். இது கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

ஸ்கிரீன் ரெக்கார்டர்

ஸ்கிரீன் ரெக்கார்டர்

இந்த மொபைலில் மற்றொரு முக்கிய வசதி ஸ்க்ரீன் ரெக்கார்டர். உங்களது மொபைல் திரையில் உள்ள மெனு, வீடியோ அல்லது வீடியோ கேம் போன்றவற்றை அப்படியே ரெக்கார்டு செய்வதற்கு இது உதவிகரமானதாக இருக்கும். போன் திரையின் மேற்புறத்தில் இருக்கும் மெனு ஐகானை திறந்து, இந்த ஸ்க்ரீன் ரெக்கார்டரை இயக்க முடியும். மிக சுலபமாக இதனை இயக்குவதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எந்த துல்லியத்தில், எவ்வளவு நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். திரையில் லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெயிட் அல்லது ஆட்டோ மோடில் மாற்றிக் கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன.

ஸென் மோடு ஆப்ஷன்

ஸென் மோடு ஆப்ஷன்

இந்த மோடில் வைக்கும்போது 20 நிமிடத்திற்கு போனின் அனைத்து விதமான செயலிகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். 20 நிமிடங்கள் வரை இயக்க முடியாது. அழைப்புகள் மட்டுமே அனுமதிக்கும். அலுவலக கூட்டம் அல்லது முக்கிய தருணங்களில் இந்த ஜென் மோடு பயனுள்ளதாக இருக்கும்.

அடாப்டிவ் பேட்டரி

அடாப்டிவ் பேட்டரி

இந்த மொபைல்போனில் அடாப்டிவ் பேட்டரி என்ற சிறப்பு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த சிறப்பு நுட்பத்தை தேர்வு செய்யும்போது, பேட்டரியின் செம்மையாக இருப்பதுடன், ஆயுட்காலமும் அதிகரிக்கும் வாய்ப்பை வழங்கும். செட்டிங்ஸில் சென்று பேட்டரி ஆப்ஷனில் அடாப்டிவ் பேட்டரி ஆப்ஷனை தேர்வு செய்தால் போதுமானது.

இந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.!இந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.!

பார்க்கிங் லோகேஷன் வசதி

பார்க்கிங் லோகேஷன் வசதி

பெரிய பார்க்கிங் வளாகங்கள் அல்லது வணிக வளாகங்களில் கார் நிறுத்திய இடத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில், ஒன்பிளஸ் 7 புரோ ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனில் வரைபட செயலியில், கார் நிறுத்திய இடத்தை குறிப்பிட்டு வைத்தால் போதும். திரும்ப வரும்போது கார் நிறுத்திய இடத்தை ஜிபிஎஸ் மூலமாக எளிதாக அடைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஜிபிஎஸ் இல்லாத இடங்களில் அந்த இடத்தை அடையாளத்துடன் படம் எடுத்துக் கொள்ளும் ஆப்ஷனையும் இந்த போன் வழங்குகிறது.

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்.!6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்.!

விலை விபரம்

விலை விபரம்

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி திறன் கொண்ட மாடல் ரூ.48,999 விலையிலும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி திறன் கொண்ட மாடல் ரூ.52,999 விலையில் கிடைக்கிறது. அதி செயல்திறன் வாய்ந்த 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி திறன் கொண்ட மாடல் ரூ.57,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

செல்லப்பெயர் உட்பட அம்பானி குறித்த 14 சுவாரஸ்யமான தகவல்.!செல்லப்பெயர் உட்பட அம்பானி குறித்த 14 சுவாரஸ்யமான தகவல்.!

Best Mobiles in India

English summary
Here are given some important features of Oneplus 7 Pro smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X