Home
Mobile

ஹுவெய் விஷன் vs ஹுவெய் போல்டர்- ஒப்பீட்டு பார்வை

By Super
ஹுவெய் விஷன் vs ஹுவெய் போல்டர்- ஒப்பீட்டு பார்வை
பட்ஜெட் விலையில் ஆன்ட்ராய்டு போன்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டை அல்லோகல்ல படுத்தி வருகிறது ஹுவெய். வடிவமைப்பில் ஒரே மாதிரியாக இருக்காமல் வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப புதிய புதிய வடிவமைப்புடன் வரும் ஹுவெய் போன்களை வாடிக்கையாளர்கள் கைதட்டி வரவேற்கின்றனர்.

அந்த வகையில், ஹுவெய் நிறுவனம் விரைவில் மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் விஷன் மற்றும் போல்டர் ஆன்ட்ராய்டு போன்களின் சிறப்பம்சங்களின் ஒப்பீட்டை காணலாம். இதில், ஹுவெய் போல்டர் தொடுதிரை மற்றும் கிவெர்ட்டி கீபேடு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.6 கொண்ட கெப்பாஸிட்டிவ் டச் ஸ்கிரீன் தெளிவான வீடியோ மற்றும் படங்களை காட்டும்.

ஹுவெய் விஷன் ஹையர்எண்ட் ஸ்மார்ட்போன் ரகத்தில் வருகிறது. 3.7 மல்டி டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் கொண்ட போனாக வந்துள்ளது. கிளாசி பினிஷிங் வடிவமைப்பை கொண்ட இந்த போன் பார்த்தவுடன் கவரும் வகையில உள்ளது.

இதில், க்யூவல்காம் 1ஜிகாஹெர்ட்ஸ் ஸ்நாப்டிராகன் 8255 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளதால், மல்டி டாஸ்க்கிங் வேலைகளின்போது திறம்பட செயலாற்றும். இது, வி-2.1 வெர்ஷன் புளூடூத், 2ஜிபி ரோம் மெமரி, 32ஜிபி கூடுதல் மெமரிக்கார்டுக்கான மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்துவதற்கான ஸ்லாட்டும் இருக்கும்.

ஹுவெய் போல்டர் க்யூவல்காம் எம்எஸ்எம் 528 மெகாஹெர்ட்ஸ் ஆற்றல் கொண்ட 7255 பிராசஸர்,512எம்பி ரோம், 3.2 மெகாபிக்செல் கேமரா ஆகிய வசதிகளை கொண்டிருக்கும். இதில், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதியும் உண்டு. எம்பி-3, ஏஏசி+ மற்றும் ஏஏசி ஆகிய அனைத்து பார்மெட்டுகள் ஆடியோ பைல்களையும் இயக்கும்.

போல்டரில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மல்டி சென்சார் டச் ஸ்கிரீன் கொண்டிருப்பதால், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். இதிலும், வி2.1 வெர்ஷன் புளூடூத் வசதியை கொண்டிருக்கிறது.தவிர, கூகுள் மேப், ஆர்கனைஸர் காலண்டர், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது.

விரைவி்ல் இந்திய மார்க்கெட்டிற்கு வர இருக்கும் ஹுவெய் போல்டர் ரூ.8,000 விலையிலும், இதைத்தொடர்ந்து வர இருக்கும் ஹுவெய் விஷன் ரூ.18,000 விலையிலும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X