Home
Mobile

வந்தது ஹர்திக் பாண்டியா கையில் இருந்த Poco X5 Pro 5G! கிக் ஏற்றும் அம்சங்கள்! விலை என்ன தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே Poco X5 Pro 5G ஸ்மார்ட்போன் குறித்த தகவல் தொடர்ந்து உலா வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புதிய Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மூலம் இந்த போனின் புகைப்படம் முதன்முதலாக கசிந்தது. தொடர்ந்து இந்த போன் குறித்த பல்வேறு கசிவுத் தகவல் உலா வரத் தொடங்கியது. தகவல் ஒவ்வொன்றும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.

வந்தது ஹர்திக் பாண்டியா கையில் இருந்த Poco X5 Pro 5G!  விலை தெரியுமா?

Poco X5 Pro 5G அறிமுகம்

இந்த நிலையில் போக்கோ நிறுவனம் புதிய Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Poco X5 Pro 5G போன் ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் முழு-HD+ Xfinity AMOLED டிஸ்ப்ளே ஆதரவு இருக்கிறது.

இந்தியாவில் அறிமுகமான புதிய போக்கோ ஸ்மார்ட்போன்

Poco X5 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. டூயல் சிம் (நானோ) 5ஜி ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை

அதேபோல் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் முழு-HD+ Xfinity AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 nits உச்ச பிரகாச நிலை ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. 4K வீடியோக்களை 30fps இல் பதிவு செய்ய இது பயனர்களை அனுமதிக்கும். Poco நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

வந்தது ஹர்திக் பாண்டியா கையில் இருந்த Poco X5 Pro 5G!  விலை தெரியுமா?

Poco X5 Pro 5G விலை மற்றும் சலுகை

Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.22,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.24,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த போக்கோ ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் பிளாக், ஹொசைரன் ப்ளூ மற்றும் மஞ்சள் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்தால் ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

Poco X5 Pro 5G சிறப்பம்சங்கள்

Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 nits பீக் பிரைட்னஸ் ஆதரவுடன் கூடிய 6.67-இன்ச் Xfinity AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 240Hz டச் சாம்பிளிங், HDR10+ ஆதரவு மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே. இந்த புதிய ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778G SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

108 மெகாபிக்சல் கேமரா

Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த போனில் 108 மெகாபிக்சல் ISOCELL HM2 பிரதான சென்சார் உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் இரண்டாம் நிலை கேமராவாகவும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மூன்றாம் நிலை கேமராவாகவும் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற கேமரா ஆனது 4K வீடியோக்களை 30fps இல் பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 120fps இல் முழு எச்டி வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

வந்தது ஹர்திக் பாண்டியா கையில் இருந்த Poco X5 Pro 5G!  விலை தெரியுமா?

5,000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்

Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 14 மூலம் இது இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2 வருட ஆண்ட்ராய்டு OS புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட பாதுகாப்பு இணைப்புகளை பெறும் என Poco உறுதியளித்துள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு ஆதரவுக்கான IP53 மதிப்பீட்டை பெற்றிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

பல்வேறு மேம்பட்ட அம்சங்கள்

USB Type-C போர்ட் ஆதரவு மற்றும் ஹெட்போன் ஜாக் இதில் உள்ளது. Poco X5 Pro 5G ஆனது டூயல்-பேண்ட் Wi-Fi மற்றும் ப்ளூடூத் 5.1 வயர்லெஸ் இணைப்புகளை கொண்டிருக்கிறது. இதில் 12-அடுக்குகள் கொண்ட கிராஃபைட் ஆதரவு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை வெளியேற்றும் தன்மையை உறுதி செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
108MP Camera, 5000mAh Battery Powered Poco X5 Pro 5G Launched in India: Do You Know the Price?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X