ஓஹோய்ய்.. OnePlus Nord CE 4 விலை இவ்ளோ தானா! 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன், 100W சார்ஜிங், 16GB ரேம், 50MP OIS கேமரா!
இந்தியாவில் அறிமுகமாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில்.. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) மாடலின் விலை நிர்ணயம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? அனைத்து விவரங்களும் இதோ:

என்ன விலை? நம்பகமான சோர்ஸிடம் இருந்து கிடைக்கப்பட்ட தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படலாம்.
இந்த விலைகள் உண்மையாகும் பட்சத்தில், முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) மாடலை விட புதிய சிஇ 4 மாடலானது மிகவும் மலிவாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒபின்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 12ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.28,999 க்கும் அறிமுகமானது.

என்னென்ன அம்சங்கள்? உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் (5G Support) வரும் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3 Chipset) மூலம் இயக்கப்படும். இந்த சிப்செட் 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்படும். கூடுதலாக விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வழியாக ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்தத் ரேம்-ஐ மேலும் 8ஜிபி விரிவாக்க முடியும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் - 100வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (100W SUPERVOOC Fast Charging) ஆகும். இதற்கு முன்னால் வந்த மாடல்களுடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இது 29 நிமிடங்களில் பேட்டரியை 1% முதல் 100% சார்ஜ் செய்யும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 93.4% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ உடனான 6.7-இன்ச் ஃப்ளூயிட் அமோஎல்இடி டிஸ்பிளே (Fluid AMOLED display) இடம்பெறலாம். மேலும் இதில் 5500mAh பேட்டரி பேக் செய்யப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 Sensor), ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) உடனான 50எம்பி மெயின் கேமரா மற்றும் 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா வைடு கேமரா (Sony IMX355 ultrawide camera) இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்; இது டிஸ்பிளேவின் மேல்பாகத்தில் உள்ள நாட்ச் டிசைனில் உட்பொதிக்கப்படும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 வெளியீட்டு நிகழ்வை லைவ் ஆக பார்ப்பது எப்படி? ஒன்பிளஸ் இந்தியா யூட்யூப் சேனலின் (OnePlus India YouTube Channel) வழியாக ஒன்பிளஸ் நார்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வை நேரலையில் பார்க்கலாம். இந்நிகழ்வு ஏப்ரல் 1, 2024 அன்று மாலை 6:30 மணிக்கு தொடங்கும்!


Click it and Unblock the Notifications








