முரட்டு காம்பினேஷனில் புதிய Redmi போன்.. 100W பாஸ்ட், 27W ரிவர்ஸ் சார்ஜிங் உடன் 9000mAh பேட்டரி!
சும்மா பேச்சுக்காக அல்ல.. உண்மையாகவே ரெட்மி (Redmi) நிறுவனம் ஒரு முரட்டு ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சும்மாவே ரெட்மி டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வெயிட்டான அம்சங்களுடன் வரும். இந்த முறை ரெட்மி நிறுவனம் டர்போ மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.
அது ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Redmi Turbo 5 Max) ஸ்மார்ட்போன் ஆகும். இது ஏற்கனவே 9000mAh பேட்டரி மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் சிப்செட்டுடன் அனுப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் டைமன்சிட்டி 9500எஸ் உடன் அறிமுகமாகும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.

இதற்கிடையில் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதையும் ரெட்மி உறுதிப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 100W புரோகிராம் செய்யக்கூடிய பவர் சப்ளை நெறிமுறையை (Programmable Power Supply Protocol) ஆதரிக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒப்பிடுகையில் ரெட்மி டர்போ 4 ப்ரோ மற்றும் ரெட்மி டர்போ 4 ஆகிய மாடல்களில் 90W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வந்தது. ஆக 100W பாஸ்ட் சார்ஜிங் வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருக்கும். முந்தைய மாடல்கள் 22.5W ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஆக இதிலும் நல்ல அப்கிரேட் கிடைக்கிறது.
இருப்பினும் பேட்டரி கெப்பாசிட்டி தான் உண்மையான ஹைலைட். நினைவூட்டும் வண்ணம் ரெட்மி டர்போ 4 ப்ரோ 7550mAh பேட்டரியை கொண்டுள்ளது, அதே நேரத்தில் ரெட்மி டர்போ 4 மாடல் ஆனது 6550mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆக 9000mAh பேட்டரி உடன் வரும் புதிய டர்போ மேக்ஸ் மாடல் ஆனது பெயருக்கு ஏற்றபடியே "மேக்ஸ்" ஆகவும், முரட்டு போன் ஆகவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் வரலாம். கேமரா விவரங்கள் குறித்து பெரிய தகவல்கள் இல்லை. முன்னதாக வந்த மாடலை போலவே 50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் டூயல் கேமரா செட்டப்பை கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சீனாவில் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் மாடலாக அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இது போக்கோ மாடல் ஆக நடப்பு காலாண்டிற்குள் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அறிமுகத்திற்கு ரெடியாகும் ரெட்மி நோட் 15 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்: ரெட்மி நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான நோட் சீரீஸின் கீழ் 2 புதிய மாடல்களை, கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அது ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) மாடல்கள் ஆகும்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ் 2 உடன் உலகளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அதே டிஸ்பிளே, அதே பேட்டரி மற்றும் அதே சிப்செட்களுடன் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாவில்லை.
ரெட்மி நோட் 15 சீரீஸ் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கலாம்? ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 - ரூ.28,000 என்கிற பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








