Home
Mobile

வெறும் 28 மணிநேரத்தில் 1 லட்சம் ஆர்டர்.. விற்பனையில் கலக்கும் Samsung போன்.. என்ன மாடல்? என்ன விலை?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் மீது இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளார் என்பதை நிரூபிக்கும் ஒரு தகவலை சாம்சங் நிறுவனமே வெளியிட்டு உள்ளது. அதென்ன தகவல்? அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவற்றின் விலை நிர்ணயம் என்ன? இதோ முழு விவரங்கள்:

இந்தியாவின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங், அதன் ஐந்தாம் தலைமுறை ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் வழியாக ஈர்க்கக்கூடிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மாடல்களை பற்றித்தான்!

28 மணிநேரத்தில் 1 லட்சம் ஆர்டர்.. விற்பனையில் கலக்கும் Samsung போன்!

இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முன்பதிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற முதல் 28 மணி நேரத்திற்குள் 100,000க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) மாடல்களை ஆர்டர் செய்துள்ளனர்.

இந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கை ஆனது முந்தைய தலைமுறை மாடல்கள் (அதாவது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 4 மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4) உடன் ஒப்பிடும்போது, முன்பதிவுகளில் 1.7 மடங்கு அதிகரிப்பை குறிக்கிறது. இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது இந்திய நுகர்வோரின் வளர்ந்து வரும் உற்சாகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகள் ஆனது கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டன. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் வருகிரியா ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போன் ஆனது, தனிப்பட்ட மற்றும் ஸ்டைலான மடிக்கக்கூடிய அனுபவத்தை சிறிய, பாக்கெட் அளவிலான வடிவமைப்பில் வழங்குகிறது, இது சுய வெளிப்பாட்டிற்கு ஏற்றது. அதன் வெளிப்புற டிஸ்பிளே இப்போது 3.78 மடங்கு பெரியதாக இருப்பதால், இது மேம்பட்ட பயன்பாட்டினை வழங்குகிறது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய டிஸ்பிளேவுடன் கூடிய ப்ரொடெக்டிவிட்டி பவர்ஹவுஸ் ஆகும், இது சாம்சங் கேலக்ஸி இஸட் சீரிஸில் இன்னும் மெல்லிய மற்றும் இலகுவான ஃபோல்ட் ஆக இருக்கும் அதே சமயம் மிகவும் வலுவான செயல்திறனையும் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஆகிய இரண்டுமே ஐபிஎக்ஸ்8 ஆதரவு, விமான-தர ஆர்மர் அலுமினிய பிரேம்கள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆகியவைகளை கொண்டுள்ளது. கூடுதலாக, இவ்விரு மாடல்களுமே ஒரு புதுமையான ஒருங்கிணைக்கப்பட்ட ஹிஞ் மாட்யூல் உடன் பொருத்தப்பட்டுள்ளன.

விலை விவரங்களை பொறுத்தவரை, கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.99999 (8ஜிபி ரேம் + 256 ஜிபி) ஆகும். மறுகையில் உள்ள கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,54,999 (12ஜிபி ரேம் + 256 ஜிபி) ஆகும்

கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 மதிப்புள்ள பலன்களைப் பெறுவார்கள். மறுகையில் உள்ள கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மாடலை முன்பதிவு செய்பவர்கள் ரூ.23000 மதிப்புள்ள பலன்களைப் பெறுவார்கள்.. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகள் சாம்சங் வலைதளம் மட்டுமின்றி, முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகளிலும் அணுக கிடைக்கும்.

"கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன்களின் வெற்றியானது, புதிய முன்னேற்றங்களுக்கு இந்திய நுகர்வோரின் ஏற்புத்தன்மையை நிரூபிக்கிறது. இந்த மாடல்கள் இந்தியாவில் எங்கள் தலைமையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று சாம்சங் தென்மேற்கு ஆசியாவின் தலைவர் மற்றும் சிஇஓ-வான ஜேபி பார்க் கூறி உள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
100000 Pre Bookings In 28 hours Heavy response From Indians on Samsung Galaxy Z Flip 5 and Fold 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X