6 மணி நேரத்துல 10,000 ஆர்டர்.. அடிச்சு புடிச்சு வாங்கிய இந்தியர்கள்.. இந்த போனில் அப்படி என்ன ஸ்பெஷல்?
ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 13 ப்ரோ சீரீஸ் 5ஜி (Realme 13 Pro Series 5G) மாடல்கள் ஒரு புதிய ப்ரீ-ஆர்டர் சாதனையை படைத்துள்ளது. இந்த சீரிஸின் கீழ், ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro 5G) என்கிற 2 மாடல்கள் ஜூலை 30 ஆம் தேதி மதியம் அறிமுகம் செய்யப்பட்டன மற்றும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவுகள் ஜூலை 30 ஆம் தேதி முதல் தொடங்கியது.
ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சீரீஸ் வெறும் 6 மணி நேரத்திற்குள் 10,000 ப்ரீ-ஆர்டர்களை பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ரியல்மி இந்தியாவின் (Realme India) அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வதன் மூலம் ரூ.3,000 வரை சேமிக்க முடியும் என்று, ரியல்மி குறிப்பிட்டுள்ளது.

ரியல்மி 13 ப்ரோ சீரீஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆன ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.29,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.31,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. ரூ.33,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எமரால்டு கிரீன் மற்றும் மோனெட் கோல்டு கலர்களில் வாங்க கிடைக்கும்.
ப்ரோ வேரியண்ட் ஆன ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.23,999 க்கு, 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.25,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எமரால்டு க்ரீன், மோனெட் பர்பில் மற்றும் மோனெட் கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும். இரண்டுமே ஸ்மார்ட்போன்களுமே ஆகஸ்ட் 6 முதல் விற்பனைக்கு வரவுள்ளன.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 ஓஎஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், அட்ரினோ 710 ஜிபியு, 12 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் 1 / 1.56-இன்ச் சோனி LYT-701 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் + f/1.88 அபெர்க்ஷர்) + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 8-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இதன் கேமரா செட்டப்பில் ஏஐ ஆடியோ ஜூம், ஏஐ குரூப் மேம்பாடு மற்றும் ஏஐ ஸ்மார்ட் ரிமூவல் போன்ற பல ஏஐ அடிப்படையிலான அம்சங்களும் உள்ளன, கடைசியாக இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.
ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது ப்ரோ பிளஸ் மாடலில் உள்ள அதே டூயல் சிம், சாஃப்ட்வேர் மற்றும் சிப்செட் ஆகியவற்றை தான் கொண்டுள்ளது. ஆனால் இது OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராவிலும் வேறுபாடுகள் உள்ளன. இது 50-மெகாபிக்சல் (சோனி LYT-600 1 / 1.95-இன்ச் சென்சார் மற்றும் ஓஐஎஸ்) + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது.
முன்பக்கத்தில் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலில் உள்ளதை போலவே 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. மேலும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கடைசியாக இது 45W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








