2024 ஆரம்பிக்குற வரைக்கும் எந்த புது ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க.. ஏன்னா?
2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் வரை வேறு எந்த புதிய ஸ்மார்ட்போன்களையும் வாங்கி விட வேண்டாம் என்று கூறுவதற்கு.. 2024 ஜனவரி மாதம் தொடங்கிய வேகத்திலேயே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள "சில தரமான" ஸ்மார்ட்போன்கள் தான் முக்கிய காரணம்!
அப்படியாக, 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது? என்ன மாடல் சரியாக எந்த தேதியில் இந்திய சந்தையில் வெளியாகும்? அது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

01. ஷாவ்மீ ரெட்மி 13 நோட் சீரீஸ் (Xiaomi Redmi Note 13 Series): ஷாவ்மீ நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி, வருகிற ஜனவரி 4 ஆம் தேதியன்று அதன் ரெட்மி நோட் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 13 (Redmi Note 13), ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) என மொத்தம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 சீரிஸின் டாப்-ஆஃப்-லைன் (Top-of-line) ப்ரோ பிளஸ் மாடலானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவை (1.5K OLED Display) கொண்டிருக்கும்.
மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா ப்ராசஸர், 120W வயர்டு சார்ஜிங் 5000mAh பேட்டரி, ஐபி68 ரேட்டிங் உள்ளிட்ட ஹை-எண்ட் அம்சங்களையும் பேக் செய்யும். மிகவும் மலிவான ரெட்மி நோட் 13 மாடாலானது டைமன்சிட்டி 6080 சிப்செட் மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 ரூ.15,000 பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 13 ப்ரோ ரூ.18,000 பட்ஜெட்லும் மற்றும் ரெட்மி 13 ப்ரோ பிளஸ் ரூ.24000 பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விலைகள் சீன விலையை அடிப்படையாக கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
02. ஒன்பிளஸ் 12 (OnePlus 12): ஒன்பிளஸின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனானஒன்பிளஸ் 12 வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.60,000 முதல் ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 6.82-இன்ச் 2கே LTPO AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3, 100W ஃபாஸ்ட் வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உடனான 5400mAh பேட்டரி, 50எம்பி + 48எம்பி + 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா போன்றவைகளை பேக் செய்கிறது.
03. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R): ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் அதே தேதியில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனும் அறிமுகமாக உள்ளது. இது 6.78-இன்ச் BOE X1 ஓரியண்டல் OLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 100W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் உடனான 5500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். இது ரூ.40,000 முதல் ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.
04. விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 and Vivo X100 Pro): கடந்த டிச.14-ல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எக்ஸ்100 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன்கள் 2024 ஜனவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே புதிய மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட்டை பேக் செய்யும். ப்ரோ மாடலானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 50எம்பி 1-இன்ச் IMX989 VCS பயோனிக் சென்சாரை (எஃப்/1.75 அபெர்ச்சர்) + 50எம்பி 150-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ அல்ட்ராவைட் கேமரா + 100எக்ஸ் ஜூமிங் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுளது.
மறுகையில் உள்ள விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு உடனான 50எம்பி 1/ 1.49-இன்ச் IMX920 VCS பயோனிக் சென்சார் (எஃப்/1.57 அபெர்ச்சர் லென்ஸ்) + 50எம்பி அல்ட்ராவைட் கேமரா + 3எக்ஸ் ஜூமிங் மற்றும் எஃப்/2.57 அபெர்ச்சர் லென்ஸ் உடனான 64எம்பி டெலிபோட்டோ கேமராவை கொண்டுள்ளது.
05. சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series): இந்த சீரீஸின்கீழ் மொத்தம் 3 ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 17 ஆம் தேதியன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாடல்களுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மற்றும் சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏஐ ஸ்மார்ட் அம்சங்களை பேக் செய்யும். விலை நிர்ணயம் எஸ்23 சீரிஸுடன் ஒற்றுப்போலாம்.


Click it and Unblock the Notifications